கர்நாடகாவில் அத்திப்பள்ளியில் பட்டாசு கடை விபத்தில் 14 பேர் உயிரிழந்த நிலையில், பட்டாசுக் கடை உரிமையாளர் நவீன் ரெட்டி, அவரது தந்தை ராமசாமி இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

11:22 PM (IST) Oct 08
நடிகை சமந்தா தற்போது வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் சமந்தாவின் லேட்டஸ்ட் போட்டோக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.
10:06 PM (IST) Oct 08
புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை சார்பில், பிரசாதம் வழங்கப்பட்டது.
09:40 PM (IST) Oct 08
குறிப்பிட்ட 5 வங்கிகளின் FD இல் முதலீடு செய்வதன் மூலம் நீங்கள் வரியைச் சேமிக்கலாம். இதன் மூலம் உங்களுக்கு பெரும் வட்டி கிடைக்கும்.
08:18 PM (IST) Oct 08
அத்திப்பள்ளி பட்டாசு கடை விபத்து தொடர்பான வழக்கு விசாரணை சிஐடி போலீசாருக்கு மாற்றப்படும் என கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்
07:37 PM (IST) Oct 08
இஸ்ரேல், பாலஸ்தீனத்தில் சிக்கியிருந்த மேகாலயா மாநிலத்தை சேர்ந்த 27 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்
06:35 PM (IST) Oct 08
டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு பயன்படுத்துவோருக்கான முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. ரிசர்வ் வங்கி இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
06:01 PM (IST) Oct 08
புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரைத் தேடுகிறீர்களா? ஆனால் உங்களுக்கு ஒரு நல்ல செய்தி. அதே மாதிரி கிடைக்கிறது. அதிக மைலேஜ் மற்றும் குறைந்த விலையில் விற்பனைக்கு வந்துள்ள எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றி பார்க்கலாம்.
05:32 PM (IST) Oct 08
ரயிலில் டிக்கெட் இல்லாமல் பிடிபட்டால் இந்த முறையைப் பின்பற்ற வேண்டும். இதன் மூலம் நீங்கள் அபராதம் செலுத்த வேண்டியதில்லை.
05:18 PM (IST) Oct 08
ஆஸ்கர் விருது போட்டிக்கு, நாமினேட் செய்யப்பட்டுள்ள '2018' படத்தின் இயக்குனர் ஜூட் ஆண்டனி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். இந்த சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. மேலும் படிக்க
05:18 PM (IST) Oct 08
நடிகை வனிதா விஜயகுமார், தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில்... ஜோவிகாவின் தந்தை அனுப்பியதாக கூறி, அவர் தமிழில் சரளமாக வாசிக்கும் வீடியோ ஒன்றை வெளியிட அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. மேலும் படிக்க
05:17 PM (IST) Oct 08
நடிகர் விஜயகுமாரின் இரண்டாவது மகள் அனிதா விஜயகுமார், தாண்டியா நடனத்திற்கு தோழிகளுடன் தயாராகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. மேலும் படிக்க
11:45 AM (IST) Oct 08
அரியலூர் மாவட்டம் சுந்தரேசபுரம் அருகே அரசுப் பேருந்து - லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் இருந்த 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
11:35 AM (IST) Oct 08
ஓசூர் அருகே அத்திப்பள்ளியில் பட்டாசு கடை விபத்தில் 14 பேர் உயிரிழந்த நிலையில், பட்டாசுக் கடை உரிமையாளர் நவீன் ரெட்டி, அவரது தந்தை ராமசாமி இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
11:29 AM (IST) Oct 08
தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.
09:47 AM (IST) Oct 08
கர்நாடகாவில் அத்திப்பள்ளியில் உள்ள பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14ஆக உயர்ந்துள்ளது. மேலும் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
09:17 AM (IST) Oct 08
நடிகர் விஜய்யின் லியோ திரைப்பட வெள்ளோட்டத்தில் பெண்களை இழிவுபடுத்தும் தரக்குறைவான வசனம் இடம்பெற்றுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது என நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.
08:30 AM (IST) Oct 08
டெங்கு பரிசோதனை முடிவுகளை 6 மணி நேரத்தில் அளிக்க வேண்டும். அனைத்து அரசு, தனியார் ஆய்வகங்களுக்கு பொதுசுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
08:28 AM (IST) Oct 08
பழனி முருகன் கோயிலில் பராமரிப்பு பணிகளுக்காக 2 மாதங்கள் நிறுத்தப்பட்ட ரோப் கார் சேவை இன்று முதல் மீண்டும் தொடங்கியது.
07:41 AM (IST) Oct 08
தமிழ்நாடு-கர்நாடக மாநில எல்லையில் இயங்கி வந்த பட்டாசுக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 13 குடும்பத்தினருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் நிதி உதவியை அறிவித்துள்ளார்.