டி.டி.எஃப் வாசனின் ஓட்டுநர் உரிமத்தை 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்து காஞ்சிபுரம் ஆர்.டி.ஓ. உத்தரவு பிறப்பித்துள்ளார். காஞ்சிபுரத்தில் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்திய விவகாரத்தில் கைதாகி டி.டி.எஃப் வாசன் புழல் சிறையில் உள்ளார்.

04:37 PM (IST) Oct 07
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் ‘லியோ’. இந்தப் படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரிக்கிறது. வரும் அக்டோபர் 19-ம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாக உள்ள நிலையில் முக்கிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
03:44 PM (IST) Oct 07
மான்ஸ்டர் எனர்ஜி யமஹா மோட்டோஜிபி பதிப்புடன், ஏரோக்ஸ் 155 நான்கு வண்ணங்களில் கிடைக்கிறது. மெட்டாலிக் பிளாக், ரேசிங் புளூ, கிரே வெர்மில்லியன் மற்றும் சில்வர் ஆகும்.
01:27 PM (IST) Oct 07
ரூ.15,000க்குள் இருக்கும் சிறந்த 5G ஸ்மார்ட்போன்களின் விலை மற்றும் பிற முக்கிய அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
01:12 PM (IST) Oct 07
தமிழக மீனவர்களைத்தாக்கி பொருட்களை கொள்ளையடிப்பதற்காக இலங்கை அரசால் உருவாக்கப்பட்ட கூலிப்படையினே இலங்கை கடல் கொள்ளையர்கள் என ராமதாஸ் கூறியுள்ளார்.
01:04 PM (IST) Oct 07
கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் முதல் வாரமே எலிமினேட் ஆன போட்டியாளர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
01:00 PM (IST) Oct 07
வெறும் ரூ.36 முதலீட்டில் ரூ.2,00000 நிதியை பெறும் மத்திய அரசு திட்டம் பற்றியும், அவற்றின் முழுமையான விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.
12:29 PM (IST) Oct 07
ரூ.1.15 லட்சம் மதிப்புள்ள ஆப்பிள் மேக்புக் ஏர் எம்2ஐ வெறும் ரூ.70,000க்கு தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. இதுகுறித்த விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
12:02 PM (IST) Oct 07
ஐஆர்சிடிசி திருப்பதி - ஊட்டி டூர் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த டூர் பேக்கேஜ் விலை மற்றும் முக்கிய அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
11:26 AM (IST) Oct 07
எவ்வளவு சொல்லியும் கேட்காமல் மகன் காதல் திருமணம் செய்து கொண்டதால் பெற்றோர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
11:25 AM (IST) Oct 07
தற்போதைய நவீன காலத்தில் UPI பயன்பாடுகள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இது எந்த அளவுக்கு வேகமாக இருக்கிறதோ, அதே அளவுக்கு தெரியாமல் பணத்தை மாற்றி அனுப்பும் அபாயமும் உள்ளது.
10:22 AM (IST) Oct 07
புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்க திட்டமிட்டிருந்தால், இந்த ஸ்கூட்டரைப் பார்க்கலாம். அதன் அம்சங்கள் மற்றும் விலையை கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள்.
10:10 AM (IST) Oct 07
சர்ச்சைக்குரிய யூடியூப்பரான டிடிஎப் வாசன்-னின் ஓட்டுநர் உரிமத்தை 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்து காஞ்சிபுரம் ஆர்.டி.ஓ உத்தரவிட்டுள்ளார்.
10:01 AM (IST) Oct 07
ரூ.2000 நோட்டு குறித்து பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது ரிசர்வ் வங்கி. இதன் முழுமையான விவரங்களை 2000 நோட்டு வைத்திருப்பவர்கள் தெரிந்து கொள்வது அவசியம்.
09:34 AM (IST) Oct 07
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ படத்திற்கு எதிராக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
09:24 AM (IST) Oct 07
சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் வெல்டிங் பணியில் ஈடுபட்டு வந்த முருகன் (52) என்பவர் 14 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார். வெல்டிங் மேற்பார்வையாளர் மகேந்திர பாபுவை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
08:39 AM (IST) Oct 07
கோவில்கள் நமது வழிபாட்டுக்கான இடம், சுரண்டலுக்கான இடம் அல்ல என்பதை, தமிழக முதல்வர் புரிந்து கொள்ள வேண்டும் என அண்ணாமலை கூறியுள்ளார்.
07:42 AM (IST) Oct 07
திமுகவிற்கு போட்டி பாஜக என அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கூறியதற்கு நடிகரும், இயக்குனருமான போஸ் வெங்கட் பதிலடி கொடுத்து விமர்சனம் செய்துள்ளார்.
06:57 AM (IST) Oct 07
சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மயிலாப்பூர், அம்பத்தூர், பொன்னேரி உள்ளிட்ட பகுதியில் மின்தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.
06:57 AM (IST) Oct 07
சென்னை சேப்பாக்கத்தில் ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவுள்ள அக்டோபர் 8, 13, 18, 23, மற்றும் 27ம் தேதிகளில் பகல் 12 முதல் இரவு 10 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.