திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற கோவில் திருவிழாவில் தனது 1 வயது குழந்தையுடன் தீ மிக்கச் சென்ற நபர் தவறுதலாக குழந்தையுடன் தீக்குளியில் விழுந்த நிலையில், குழந்தை படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறது.
தற்போது ஆடி மாதம் நடைபெற்று வருவதால் தமிழகத்தின் பல்வேறு கோவில்களிலும் திருவிழாக்கள் வெகு விமரிசையாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக் கிழமை அம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. விழாவின் ஒரு பகுதியாக தீ மிதிக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
அதன்படி பக்தர்கள் தீ மிதித்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். அப்போது பக்தர் ஒருவர் தனது 1 வயது மகளுடன் தீ மிதிக்க தயாரானார். தீக்குளியில் இறங்கிய உடன் அந்த நபர் கால் இடறி தீக்குளியிலேயே தனது குழந்தையுடன் விழுந்தார். குழந்தை கீழே விழ, குழந்தையின் மீது அந்த நபர் விழுந்தார்.
இந்த விபத்தில் குழந்தை 35 சதவீதி தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது விபத்து தொடபான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சமூக ஆர்வலர்கள், தீ மிதித்தல் என்பது அவரவர் நம்பிக்கைக்குறிது. இதில் யாரும் தலையிட முடியாது. அவரவர் விருப்பப்படியே தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். ஆனால், ஒரு சிலர் தங்களது குழந்தைகளை கைகளில் தூக்கிக் கொண்டும், தோளில் சுமந்த வாறும் தீ மிதிக்கின்றனர்.
திருச்சி அருகே நீதிபதியின் கார் உள்பட அடுத்தடுத்து 4 கார்கள் மோதி விபத்து; போக்குவரத்து பாதிப்பு
பக்தி ஒருபுறம் இருந்தாலும் நெருப்பின் சூடு தாங்காமல் பலரும் தீக்குளியில் ஓடி சென்று தான் எதிர் திசையை அடைகின்றனர். அப்படி செல்லும் பொழுது கால் தவறி கீழே விழுவதற்கு அதிகப்படியான வாய்ப்பு உள்ளதால் குழந்தைகளை தூக்கிக் கொண்டு தீ மிதிக்கும் பழக்கத்தை கைவிட வேண்டும். இல்லையென்றால் அரசு தலையிட்டு குழந்தைகளை தூக்கிக் கொண்டு தீ மிதிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
தீமிதி திருவிழா; தமிழகத்தில் மட்டும் இவ்வளவு சிறப்பு ஏன்?