திருவள்ளூர் மாவட்டத்தில் தனது குழந்தை விளையாடுவதை கவனிக்காமல் இயக்கப்பட்ட டிராக்டரில் சிக்கி 2 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் மாவட்ட் திருவலாங்காட்டில் உள்ள நெமிலி இருளர் காலனியைச் சேர்ந்தவர் விஜய், பிருந்தா தம்பதி. இவர்களுக்கு 2 வயதில் ஜெயகிருஷ்ணன் என்ற மகன் இருந்துள்ளான். விஜய் அதே பகுதியில் வாடகைக்கு டிராக்டர் ஓட்டும் வேலை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், விஜய் நேற்று வழக்கம் போல் தனது வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த டிராக்டரை பின்னோக்கி இயக்கியுள்ளார். அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த தனது மகன் ஜெயகிருஷ்ணனை விஜய் கவனிக்கவில்லை. இந்நிலையில், பின்னோக்கி இயக்கப்பட்ட டிராக்டரின் டயரில் சிக்கிய சிறுவன் பலத்த காயமடைந்து தனது தந்தையின் கண் முன்னே துடி துடித்து பரிதாபமாக உயிரிந்தான்.
கோவை வால்பாறை அருகே காதலி கண் முன்பு நீர்வீழ்ச்சியில் குதித்த காதலன் மாயம்
தாம் இயக்கிய டிராக்டரில் சிக்கி தனது மகன் உயிரிழந்ததை அறிந்து விஜய் கதறி அழுதார். விபத்து குறித்து தகவல் அறிந்த கனகம்மாசத்திரம் காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆழ்கடலில் கிரிக்கெட் விளையாடி சென்னை அணிக்கு வாழ்த்து தெரிவித்த இளைஞர்கள்
வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த டிராட்டரில் சிக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.