திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு புதுநகர் பகுதியை சேர்ந்தவர் வேலு (50). இவரது மகன் சதீஷ் (20). இவர், கொருக்குப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.சி.ஏ 3ம் ஆண்டு படித்து வந்தார்.
குடும்ப வறுமை காரணமாக பகுதி நேரமாக பல்வேறு நிகழ்ச்சிகளில் உணவு பரிமாறும் வேலைக்கு சென்று வந்த கல்லூரி மாணவன் கொதிக்கும் ரசத்தில் விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு புதுநகர் பகுதியை சேர்ந்தவர் வேலு (50). இவரது மகன் சதீஷ் (20). இவர், கொருக்குப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.சி.ஏ 3ம் ஆண்டு படித்து வந்தார். குடும்ப வறுமை மற்றும் தனது செலவுக்காக அவ்வப்போது நண்பர்களுடன் சேர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் உணவு பரிமாறும் வேலைக்கு சென்று சம்பாதித்தும் வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 23ம் தேதி மீஞ்சூரில் ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சதீஷ் சமையல் செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது, பெரிய பாத்திரத்தில் கொதித்து கொண்டிருந்த ரசத்தில் எதிர்பாராத விதமாக சதீஷ் விழுந்துள்ளார். இதில், அவரது உடல் முழுவதும் வெந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.
உடனே அவரது நண்பர்கள் மற்றும் சமையல் பணியில் இருந்தவர்கள் சதீஷை மீட்டு உடனே கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி கல்லூரி மாணவன் சதீஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.