குற்றங்களை தடுப்பது மட்டுமே காவல் துறையின் பணியல்ல, நல்ல சமூகத்தை வடிவமைப்பதிலும் அவர்களுக்கு பங்கு உண்டு என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள பென்னாலூர் பேட்டை காவல் நிலையத்தில் பயிற்சி உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் பரமசிவம் (வயது 40). ஊத்துக்கோட்டை அருகே குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் உதவி ஆய்வாளர் குறித்து சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாக பரவி வருகிறது. கல்வி மீது ஆர்வம் கொண்ட இவர் தான் பணிபுரியும் இடங்களில் எல்லாம் பள்ளிக்கு செல்லாத குழந்தைகளை அணுகி கல்வியின் அவசியம் குறித்து வலியுறுத்தி வருகிறார்.
அந்த வகையில் இவர் தற்போது பணிபுரிந்து வரும் பென்னாலூர் பேட்டை அருகே உள்ள திடீர் நகரில் சுமார் 40 குடும்பங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் காடுகளுக்கு சென்று விறகு வெட்டியும், தேன் எடுத்து விற்றும், அரிசி ஆலைகளில் தொழிலாளர்களாக வேலை செய்தும் வருகின்றனர். இவர்கள் தங்கள் குழந்தைகளை குல தொழில்களில் ஈடுபடுத்தி வருகின்றனர்.
பள்ளிக்கு செல்லாமல் டிமிக்கி கொடுத்த சிறுவன்; வீடு தேடி வந்து அழைத்துச் சென்ற ஆசரியர்
இதனை அறிந்த உதவி ஆய்வாளர் பரமசிவம் நேற்று அந்த பகுதிக்குச் சென்று அப்பகுதி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் தமிழக அரசு பள்ளிகளில் குழந்தைகளுக்கு மதிய உணவுடன் சேர்த்து வாரத்தில் 5 நாட்கள் முட்டை, 2 நாட்கள் பயிறு வகைகள் வழங்குகிறது. குழந்தைகள் கண்டிப்பாக கல்வி கற்க வேண்டும். பள்ளிக்கு செல்லாத குழந்தைகளின் பெற்றோர் மீது வடக்கு தொடரலாம். எனவே குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புங்கள் என்று கேட்டுக் கொண்டார்.
யூடியூப் பிரபலம், கரகாட்ட கலைஞர் பரமேஸ்வரிக்கு எதிராக ஒன்று திரண்ட சக கலைஞர்கள்
காவல் உதவி ஆய்வாளர் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரலானது. இதனைத் தொடர்ந்து உதவி காவல் ஆய்வாளருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “காலைச் செய்தித்தாளில் மகிழ்ச்சிதரும் செய்தியைப் படித்தேன்! பகிர்கிறேன்.
குற்றங்களைத் தடுப்பது மட்டுமே காவல் துறையின் பணி அல்ல; நல்ல சமூகத்தை வடிவமைப்பதிலும் அவர்களது பங்கு உண்டு.
குழந்தைகளின் கல்வி உரிமைக்காகப் பேசிய பென்னாலூர்பேட்டை பயிற்சி S.I பரமசிவம் அவர்களை வாழ்த்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.