9ம் வகுப்பு மாணவர்களிடையே ஏற்பட்ட வாய்த்தகராறு; கொலையில் முடிந்த பரிதாபம்

By Velmurugan s  |  First Published Mar 31, 2023, 2:09 PM IST

திருவள்ளூரில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு மாணவர்கள் இருவர் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவத்தில் ஒரு மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


திருவள்ளூர் மாவட்டம் ஆரணி பேருந்து நிறுத்தம் அருகே அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஆரணி சுப்பிரமணயன் நகரைச் சேர்ந்த தமிழ்செல்வன் என்ற மாணவன் 9ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று மதியம் அதே வகுப்பில் படிக்கும் சக மாணவன் ஒருவன் தமிழ் செல்வனை கேலி செய்ததாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக தமிழ் செல்வனுக்கும், சக மாணவனுக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டு பின்னர் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த தமிழ் செல்வன் வகுப்பறையிலேயே மயங்கி விழுந்தான். இதனை பார்த்த சக மாணவர்கள் அதிர்ச்சியடைந்து உடனடியாக தலைமை ஆசிரியருக்கு தகவல் தெரிவித்தனர்.

Tap to resize

Latest Videos

undefined

பழனியாண்டவர் கோவிலுக்கு சொந்தமான இருவேறு கல்லூரி மாணவர்களிடையே பயங்கர மோதல்

இதனைத் தொடர்ந்து வகுப்பறையில் மயங்கிய நிலையில் இருந்த தமிழ் செல்வனை மீட்ட ஆசிரியர்கள் உடனடியாக அருகில் உள்ள ஆரணி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்று அனுமதித்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக மாணவன் பொன்னேரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு மாணவனை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

தர்மபுரியில் சட்டக்கல்லூரி மாணவி மீது தாக்குதல்; குறிப்பிட்ட சமூகத்தினர் திரண்டதால் பரபரப்பு

இது தொடர்பாக பள்ளி நிர்வாகம் சார்பில் பெற்றோருக்கும், காவல் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. மாணவன் இறப்பு குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

click me!