திருவள்ளூர் அடுத்த பெரிய குப்பத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மனைவி கற்பகம். இந்த தம்பதிக்கு பிரதிக்ஷா(10) என்ற மகள் அப்பகுததியில் உள்ள தனியார் பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்தார். சிறுமி பிரதிஷா இன்ஸ்டாவில் தனக்கென ஒரு ஐடியை கிரியேட் செய்து அதில் ரீல்ஸ் வீடியோக்களை பதிவிட்டு வந்துள்ளார்.
தந்தை படிக்கச் சொல்லி திட்டியதால் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் பிரபலமான 10 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் அடுத்த பெரிய குப்பத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மனைவி கற்பகம். இந்த தம்பதிக்கு பிரதிக்ஷா(10) என்ற மகள் அப்பகுததியில் உள்ள தனியார் பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்தார். சிறுமி பிரதிஷா இன்ஸ்டாவில் தனக்கென ஒரு ஐடியை கிரியேட் செய்து அதில் ரீல்ஸ் வீடியோக்களை பதிவிட்டு வந்துள்ளார். இதனால், அப்பகுதியில் இன்ஸ்டா குயின் என்று அழைக்கப்பட்டு வந்துள்ளார்.
இதையும் படிங்க;- கணவன், மனைவி எடுத்த விபரீத முடிவுக்கு இது தான் காரணமா? கதறியபடி நிற்கதியாய் நிற்கும் குழந்தைகள்.!
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பிரதிக்ஷா தனது பாட்டி வீட்டின் எதிரில் தோழிகளுடன் விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த தந்தை மகளை கண்டித்துவிட்டு வீட்டின் சாவியை கொடுத்து படிக்குமாறு கண்டித்தார். பின்னர் பெற்றோர் இருவரும் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளனர். நீண்ட நேரமாக கதவை தட்டியும் மகள் திறக்காததால் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.
இதையும் படிங்க;- கிராமத்தில் மஜாவாக நடைபெற்ற விபச்சாரம்.. அரைகுறை ஆடைகளுடன் சிக்கிய 3 இளம்பெண்கள்.. கல்லா கட்டிய தம்பதி கைது
அப்போது, ஜன்னல் வழியாக எட்டி பார்த்த போது ஜன்னல் கம்பியில் பிரதிக்ஷா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. உடனே கதவை உடைத்து மகளை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் பரிதாபமாக உயிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தந்தை படிக்குமாறு கூறி கண்டித்ததால் மனவேதனையில் பிரதிக்ஷா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.