திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே தச்சூர் கூட்டுசாலையில் தனியார் சொகுசு பேருந்தும், எதிரே வந்த சரக்கு லாரியும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
பொன்னேரி அருகே தனியார் சொகுசு பேருந்தும் லாரியும் மோதி விபத்துக்குள்ளானதுது. இந்த விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே தச்சூர் கூட்டுசாலையில் தனியார் சொகுசு பேருந்தும், எதிரே வந்த சரக்கு லாரியும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர்.
இதையும் படிங்க;- மாணவர்களை கழிப்பறை சுத்தம் செய்த வைத்த விவகாரம்.. பள்ளி தலைமை ஆசிரியைக்கு சரியான ஆப்பு..!
உடனே இந்த விபத்து தொடர்பாக போலீசாருக்கும், மீட்பு குழுவினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கோர விபத்தால் சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனால், விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இதையும் படிங்க;- பைக்குகள் மோதல்.. தூக்கி வீசப்பட்ட இரண்டு பேர் படுகாயம்... வெளியான பகீர் சிசிடிவி காட்சி.!