திருவள்ளூர் அருகே ரயில் முன்பு பாய்ந்து பாலிடெக்னிக் மாணவன் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
திருவள்ளூர் அருகே ரயில் முன்பு பாய்ந்து பாலிடெக்னிக் மாணவன் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை சேர்ந்த பாலிடெக்னிக் மாணவன் வழக்கம் போல் கல்லூரிக்கு செல்ல ரயில் நிலையம் சென்றதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: எனக்கு நீங்க அப்பா மாதிரி.. ப்ளீஸ் விட்ருங்க! கெஞ்சியும் விடாமல் இளம்பெண்ணை கதறவிட்ட தாயின் கள்ளக்காதலன்.!
இந்த நிலையில் யாரும் எதிர்பாரத நேரத்தில் திடிரென அங்கு வந்த ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துக்கொண்டார். இதனால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளிக்கபட்டது. அதன்பேரில் அங்கு வந்த காவல்துறையினர் உயிரிழந்த மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: சாய்பாபா பேரை சொல்லி மோசடி… ரூ1.45 கோடியை இழந்த கோவை தொழிலதிபர்!!
மேலும் இதுக்குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், மாணவர் வகுப்பறையில் செல்போன் பயன்படுத்தியதாகவும் இதனால் அவரை ஆசிரியர் திட்டியதால் மனஉளைச்சலில் மாணவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்துள்ளது. இதை அடுத்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர்.