Asianet News TamilAsianet News Tamil

மாணவர்களை கழிப்பறை சுத்தம் செய்த வைத்த விவகாரம்.. பள்ளி தலைமை ஆசிரியைக்கு சரியான ஆப்பு..!

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த பாலக்கரையில் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 35 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் 2 கழிப்பறைகள் உள்ளன. ஒன்றை ஆசிரியர்களும், மற்றொன்றை மாணவர்களும் உபயோகித்து வருகின்றனர்.

headmaster arrested under Prevention of Atrocities Act in erode
Author
First Published Dec 3, 2022, 11:56 AM IST

ஈரோடு அருகே பட்டியலின மாணவர்களை, கழிவறையை சுத்தம் செய்ய வைத்த விவகாரத்தில் தலைமறைவாக இருந்த தலைமை ஆசிரியை கீதாராணி வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். 

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த பாலக்கரையில் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 35 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் 2 கழிப்பறைகள் உள்ளன. ஒன்றை ஆசிரியர்களும், மற்றொன்றை மாணவர்களும் உபயோகித்து வருகின்றனர். இந்த கழிவறைகளை தினந்தோறும் 2 மாணவர்கள் சுத்தம் செய்ய வேண்டும் என பள்ளி தலைமை ஆசிரியர் கீதாராணி அறிவுறுத்தியுள்ளார். 

இதையும் படிங்க;- ஜெ.,யின் நீண்டநாள் பாதுகாவலர் இழப்பு பேரிழப்பு.. ஃப்ளாஷ்பேக்கை கூறி கலங்கிய பூங்குன்றன்..!

headmaster arrested under Prevention of Atrocities Act in erode

இந்த விவகாரம் அறிந்த பெற்றோர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார். அதிகாரிகள் விசாரணை நடத்த வந்தபோது தலைமை ஆசிரியை கீதாராணி பணிக்கு வராமல் தலைமறைவானார். இந்த விசாரணையில் மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்ய வைத்தது உறுதியானதை அடுத்து தலைமை ஆசிரியை கீதாராணி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். 

headmaster arrested under Prevention of Atrocities Act in erode

இதுதொடர்பாக மாணவனின் தாய் பெருந்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் தலைமறைவாக இருந்த தலைமை ஆசிரியை கீதாராணி வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டார். 

இதையும் படிங்க;- மாநகரப் பேருந்தில் நடத்துநரை தாக்கிய பெண் பயணி… வீடியோ வெளியானதால் பரபரப்பு!!

Follow Us:
Download App:
  • android
  • ios