Gym Trainer Death: அடுத்த அதிர்ச்சி.. இளம் ஜிம் பயிற்சியாளர் மாரடைப்பால் உயிரிழப்பு..!

By vinoth kumar  |  First Published Apr 6, 2023, 6:42 AM IST

கடந்த சில தினங்கள் முன்பு ஆவடியில் ஜிம் பயிற்சியாளராக இருந்த ஆகாஷ் (25) அதிக அளவில் ஸ்டீராய்டு எடுத்து கொண்டதால் இரண்டு கிட்னியும் செயலிழந்து ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்த சம்பவம் அடங்குவதற்குள் மற்றொரு இளம் ஜிம் பயிற்சியாளர் உயிரிழந்துள்ளார். 


திருவள்ளூர் அருகே இளம் ஜிம் பயிற்சியாளருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திருவள்ளூர் மாவட்டம் திருப்பாச்சூரை சேர்ந்தவர் அஜித் (24). இவர் பல மாதங்களாக ஜிம் பயிற்சியாளராக இருந்து வந்துள்ளார். கடந்த 3 மாதங்களாக ஜிம் செல்லாமல் அஜித் வீட்டில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், திடீரென வீட்டில் இருந்த அஜித்திற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- என்னால மூச்சுக்கூட விட முடியல.. ரத்த ரத்தமா வருது.. கடைசியாக பேசிய ஜிம் டிரெய்னரின் கலங்க வைக்கும் ஆடியோ வைரல்

இதனால், அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்து தீவிர சிகிச்சை அளித்தபோதும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த சில தினங்கள் முன்பு ஆவடியில் ஜிம் பயிற்சியாளராக இருந்த ஆகாஷ் (25) அதிக அளவில் ஸ்டீராய்டு எடுத்து கொண்டதால் இரண்டு கிட்னியும் செயலிழந்து ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிங்க;-  Exclusive : உடற்பயிற்சி நிலையங்களில் மாரடைப்பு! Fastrack மோகம் தான் காரணம்! - வினோத் லோகநாதன் கருத்து!

 

click me!