திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த உப்பூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான 10ம் நாளான நேற்று காவடி எடுத்தல், சுவாமி வீதி உலா நிகழ்ச்சிக்கள் விடிய விடிய நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
திருவாரூர் அருகே தண்டவாளத்தில் படுத்து உறங்கிய 2 இளைஞர்கள் மீது ரயில் ஏறியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர்.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த உப்பூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான 10ம் நாளான நேற்று காவடி எடுத்தல், சுவாமி வீதி உலா நிகழ்ச்சிக்கள் விடிய விடிய நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், திருவிழாவை காண உப்பூர் கிராமத்தை சேர்ந்த அருண் (17), பரத்குமார் (17), முருகபாண்டியன்(24) ஆகிய இளைஞர்கள் காவடி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். இரவு முழுவதும் கண் விழித்து திருவிழாவில் கலந்து கொண்டதால் உடல் சோர்பு ஏற்பட்டது. இதனால் 3 பேரும் அருகில் உள்ள ரயில் தண்டவாளத்தில் தலைவைத்து தூங்கி கொண்டிருந்தனர்.
அப்போது அதிகாலை சுமார் 3 மணியளவில் அந்த வழித்தடத்தில் வந்த தாம்பரம்-செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் தண்டவாளத்தில் படுத்திருந்தவர்கள் மீது மோதியது. இதில் அருண் என்பவர் தலை துண்டித்தும், முருகபாண்டியன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர். பரத்குமார் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இதனையடுத்து, அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.