கடவுளே இது மாதிரி ஒரு கொடுமை யாருக்கு நடக்கக்கூடாது.. கணவன் கண்முன்னே லாரி சக்கரத்தில் சிக்கி பலியான மனைவி.!

By vinoth kumar  |  First Published May 24, 2023, 9:18 AM IST

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த ஈகுவார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கபிலன்(38). அவரது மனைவி அமுதா(29). இந்த தம்பதிக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். 


இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரி சக்கரத்தில் சிக்கி மனைவி கணவர் கண்முன்னே துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த ஈகுவார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கபிலன்(38). அவரது மனைவி அமுதா(29). இந்த தம்பதிக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இந்நிலையில், கபிலன் தனது மனைவியுடன் உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- வாட்டி வதைக்கும் வெயில்.. பள்ளி திறப்பு தள்ளிப்போகிறது? அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன முக்கிய தகவல்..!

அப்போது, கண்டிகை பகுதியில் எதிரே வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், தூக்கி வீசப்பட்டதில் லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி அமுதா உடல் நசுங்கி கணவர் கண்முன்னே துடிதுடித்து உயிரிழந்தார். அவரது கணவர் கபிலன் படுகாயங்களுடன் உயிர் தப்பினார்.

இதையும் படிங்க;-  18 வயசு முடிஞ்ச ஒருவாரத்திலேயே 32 வயது ஆசிரியருடன் ஓட்டம் பிடித்த பள்ளி மாணவி! அப்புறம் என்ன நடந்தது தெரியுமா?

இந்த விபத்து தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் படுகாயமடைந்த கபிலனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அமுதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி ஓட்டுநரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கணவன் கண்முன்னே மனைவி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

click me!