சென்னையில் வேலை தேடிக் கொண்டிருந்த இளம் பெண்ணை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்ற 2 பேரை கைது செய்த காவல் துறையினர் தப்பிச் சென்ற ஒருவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
சென்னை கொரட்டூரைச் சேர்ந்த 23 வயது இளம் பெண் பெரியபாளையம் பகுதியில் வேலை தேடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த மௌலி, கார்த்திக் என்ற இரு இளைஞர்களிடம் சென்று அப்பெண் வேலை கேட்டுள்ளார். அதற்கு, வீட்டில் வேலை செய்ய பெண் வேண்டும் என்று கூறி அப்பெண்ணை அழைத்துச் சென்றுள்ளனர்.
வேலை வேண்டும் என்பதற்காக அப்பெண்ணும் அவர்களுடன் சென்றதாகக் கூறப்படுகிறது. பின்னர் அவர்கள் இருவரும் இணைந்து அப்பெண்ணை விடுதி ஒன்றுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு இவர்களது கூட்டாளியான குகனும் இவர்களுடன் இணைந்து கொண்டார். பின்னர் 3 பேரும் சேர்ந்து ஆசை வார்த்தை கூறி பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்றுள்ளனர்.
காவல் உதவி ஆய்வாளரின் கழுத்தை அறுக்க முயன்ற நபர்; 5 ஆண்டு கடுங்காவல் சிறை விதித்து உத்தரவு
அதற்கு அப்பெண் மறுப்பு தெரிவித்துள்ளார். ஆனாலும், இளம் பெண்ணை விடாத மூவரும் அவரை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்றுள்ளனர். தொடர்ந்து மறுப்பு தெரிவித்ததால் அவரை ஆபாச வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். அப்போது திடீரென காவல் துறையினர் அவர்களது வழக்கமான ரோந்து பணிக்காக அவ்வழியாக வந்துள்ளனர்.
மேதாதுவில் அணையா? கர்நாடகா துணை முதல்வருக்கு துரைமுருகன் கண்டனம்
உடனடியாக சுதாரித்துக் கொண்ட இளம் பெண் காவல் துறையினரை அணுகி அவர்களிடம் உதவி கோரியுள்ளார். உடனடியாக குகன், கார்த்திக் இருவரையும் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தப்பி ஓடிய மௌலியை தீவிரமாக தேடி வருகின்றனர். வேலை தேடி வந்த பெண்ணை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.