ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதியை சேர்ந்த மனோஜ்குமார் மருந்து விற்பனை பிரதிநிதியாக பணிபுரிந்து வந்தார். இவருக்கும் தாம்பரம் அடுத்த பெங்களத்தூரைச் சேர்ந்த தனியார் மருத்துவமனை மருத்துவர் கார்த்திகாவுக்கும் கடந்த 28ம் தேதி திருமணம் நடைபெற்றது.
திருவள்ளூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த கலவை லாரி கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் திருணமாகி 4 நாட்களே ஆன புதுமண தம்பதி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதியை சேர்ந்த மனோஜ்குமார் மருந்து விற்பனை பிரதிநிதியாக பணிபுரிந்து வந்தார். இவருக்கும் தாம்பரம் அடுத்த பெங்களத்தூரைச் சேர்ந்த தனியார் மருத்துவமனை மருத்துவர் கார்த்திகாவுக்கும் கடந்த 28ம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு பெங்களத்தூருக்கு மறுவீட்டுக்குச் சென்ற மனோஜ்குமார் கார்த்திகா தம்பதி நேற்றிரவு காரில் அரக்கோணம் நோக்கி சென்றுக்கொண்டிருந்தனர்.
இதையும் படிங்க;- ஓசி மட்டன் பிரியாணிக்கு ஆசைப்பட்டு சஸ்பெண்டான 7 போலீஸ்.. விசாரணையில் அம்பலம்
இந்த காரை மனோஜ்குமார் ஓட்டி சென்றுள்ளார். அப்போது, பூந்தமல்லி அரக்கோணம் நெடுஞ்சாலையில் கூவம் அருகே சென்று கொண்டிருந்தனர். அதே நேரத்தில் அரக்கோணத்திலிருந்து சென்னை நோக்கி கலவை இயந்திரம் பொருத்தப்பட்ட லாரி வந்து கொண்டிருந்தது. அதிவேகமாக வந்து வளைவில் திரும்ப முயன்ற லாரி கட்டுப்பாட்டை இழந்து கார் மீது கவிழ்ந்துள்ளது.
லாரிக்கு அடியில் சிக்கிய கார் அப்பளம் போல் நொறுங்கியது. இதில், காருக்குள் இருந்த தம்பதி மனோஜ்குமார், கார்த்திகா ஆகிய இருவரும் ரத்த வெள்ளத்தில் உடல்நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக மப்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் 2 நேரம் போராட்டத்திற்கு பிறகு லாரியை அப்புறப்படுத்தினர். அதற்கு பிறகு காரை உடைத்து நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க;- உன்ன எனக்கு ரொம்ப பிடிக்கும்.. நைட்டுக்கு நான் வரவா.. கல்லூரி மாணவியுடன் ஆபாச சாட்டிங் செய்த பேராசிரியர்.!
இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தப்பியோடிய லாரி ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர்.இந்நிலையில் திருமணமாகி 4 நாள்களே ஆன நிலையில் மாமியார் வீட்டிற்கு சென்று திரும்பும் போது விபத்தில் சிக்கி புதுமண தம்பதியர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.