ஆசை ஆசையாய் நிறைமாத கர்ப்பிணி மனைவியை பார்க்க சென்ற கணவர்.. தலை நசுங்கி உயிரிழந்த பரிதாபம்..!

Published : Oct 08, 2021, 06:15 PM ISTUpdated : Oct 08, 2021, 06:18 PM IST
ஆசை ஆசையாய் நிறைமாத கர்ப்பிணி மனைவியை பார்க்க சென்ற கணவர்.. தலை நசுங்கி உயிரிழந்த பரிதாபம்..!

சுருக்கம்

திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த கிரிதரன் (36). இவருக்கு திருமணமாகி 3 வருடங்கள் ஆகிறது. இந்நிலையில், கிரிதரனின் மனைவி நிறைமாத கர்ப்பிணி என்பதால் காஞ்சிபுரத்தில் உள்ள அவரது தாய் வீட்டிற்கு பிரசவத்திற்காக சென்றுள்ளார். 

நிறைமாத கர்ப்பிணி மனைவியை பார்க்க சென்ற போது கணவர் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த கிரிதரன் (36). இவருக்கு திருமணமாகி 3 வருடங்கள் ஆகிறது. இந்நிலையில், கிரிதரனின் மனைவி நிறைமாத கர்ப்பிணி என்பதால் காஞ்சிபுரத்தில் உள்ள அவரது தாய் வீட்டிற்கு பிரசவத்திற்காக சென்றுள்ளார். 

இந்நிலையில், மனைவியை பார்ப்பதற்காக கிரிதரன் தனது இருசக்கர வாகனத்தில் திருவள்ளூரில் இருந்து காஞ்சிபுரத்தை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, பின்னால் வந்த லாரி எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் மோதியது. இதில், நிலைதடுமாறி கீழே விழுந்ததில் லாரி தலையில் ஏறி இறங்கியது. இதில், தலை நசுங்கி கிரிதரன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். 

இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கிரிதரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து  தப்பியோடிய ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர். நிறைமாத கர்ப்பிணி மனைவியை பார்க்க சென்ற போது கணவர் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

ஷாக்கிங் நியூஸ்! சிக்கன் ஃப்ரைட் ரைஸ் சாப்பிட்ட 9ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு!
Chennai Rain Update: சென்னை உள்பட 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!!