கஷ்டப்பட்டு டாக்டருக்கு படிக்க வைத்த மகள் வேறு சாதி பையனுடன் காதல் திருமணம்.. விபரீத முடிவு எடுத்த தாய், தந்தை

By vinoth kumar  |  First Published Oct 7, 2021, 8:54 PM IST

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே மாம்பேடு கிராமத்தை சேர்ந்தவர் தாமரைச்செல்வன் (60). இவர் விவசாயி. இவரின் மனைவி சரளா (55). இவர்களது மகள் அர்ச்சனா (28). பல் மருத்துவரான இவர், சென்னை ரெட்டேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். பெரியபாளையத்தில் இருந்து தினமும் வேலைக்கு பேருந்தில் செல்லும்போது சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்துவரும் கணபதி (35) என்பவருடன் அர்ச்சனாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

மகள் காதலித்து திருமணம் செய்துகொண்டதால் மனவேதனை அடைந்த தாய் தற்கொலை செய்த நிலையில், தந்தை விஷம் குடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே மாம்பேடு கிராமத்தை சேர்ந்தவர் தாமரைச்செல்வன் (60). இவர் விவசாயி. இவரின் மனைவி சரளா (55). இவர்களது மகள் அர்ச்சனா (28). பல் மருத்துவரான இவர், சென்னை ரெட்டேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். பெரியபாளையத்தில் இருந்து தினமும் வேலைக்கு பேருந்தில் செல்லும்போது சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்துவரும் கணபதி (35) என்பவருடன் அர்ச்சனாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- அக்காவால் நின்று போன திருமணம்.. மனவேதனையில் குன்றத்தூர் அபிராமியின் தம்பி தற்கொலை..!

இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே காதலாக மாறியுள்ளது. இருவரும் வேறு சமுகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெண் வீட்டில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், பெற்றோர் எதிர்ப்பை மீறி கடந்த மாதம் 28ம் தேதி சென்னையில் கணபதி, அர்ச்சனா ஆகியோர் திருமணம் செய்துகொண்டனர். இதனால் பெற்றோர் கடும் மனவேதனை இருந்து வந்துள்ளனர். 

இதையும் படிங்க;- அட பாவிகளா.. வரதட்சணை கொடுமையால் 7 மாத கர்ப்பிணி பெண் தீக்குளித்து தற்கொலை..!

இந்நிலையில், இன்று காலை அர்ச்சனாவின் தாய் சரளா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு வந்த தாமரைச்செல்வன் மனைவி உயிரிழந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து அவர் வீட்டில் வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து உயிரிழந்துவிட்டார். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகள் பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டதால் அவமானம் தாங்க முடியாமல் பெற்றோர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

click me!