கோயிலுக்குள் சென்ற பட்டியலின இளைஞரை மிரட்டிய விவகாரம் - சேலம் திமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் அதிரடியாக கைது

By Raghupati R  |  First Published Jan 30, 2023, 11:53 PM IST

பட்டியலின இளைஞரை ஆபாசமாக திட்டிய விவகாரத்தில் திமுக முன்னாள் நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.


சேலம் மேற்கு வட்டத்தில் உள்ளது திருமலைகிரி என்ற கிராமம். இந்த கிராமத்தில் அமைந்துள்ளது பெரிய மாரியம்மன் கோயில். 

இங்கு பட்டியலின சமூகத்தைச் சார்ந்த பிரவீன் என்பவர் கோயிலுக்குள் சென்று வழிபட வேண்டும் என்று கேட்டிருக்கிறார். இதற்கு அங்குள்ள வேறு சமூகத்தை சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அந்த இளைஞர் திரும்ப வந்துவிட்டார்.

Tap to resize

Latest Videos

undefined

இதனை அறிந்த சாதியவாதிகள், பட்டியலின சமூகத்தைச் சார்ந்தவர் கோயிலுக்குள் சென்றால் கோயில் தீட்டாகிவிடும் என்றும், சாதி இந்துக்களாகிய நாங்கள் கோயிலுக்குள் வரமாட்டோம் எனவும் தெரிவித்ததாகக் கூறி உள்ளனர்.

இதையும் படிங்க..அரசியலை விட்டு விலக நான் தயார்.. ஒரிஜினல் வீடியோ இருக்கு! திமுகவுக்கு சவால் - அண்ணாமலை பரபரப்பு பேட்டி

ஒன்றிய திமுக செயலாளரும் திருமலைகிரி ஊராட்சி மன்றத் தலைவருமான டி.மாணிக்கம் என்பவர் கடந்த 27 ஆம் தேதி கிராமத்து மக்கள் அனைவரையும் கூட்டி வைத்து ஆபாசமாக திட்டி, கொலைமிரட்டல் விடுத்துள்ளார். வாய்க்கு, வாய் ஆபாச சொற்களை வைத்து பேசியதோடு, கிராமத்து மக்களை கிராமத்து விட்டே விரட்டி விடுவேன், கொலை செய்து விடுவேன் என்றும் நேரடியாக மிரட்டியுள்ளார்.

இந்த வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை உண்டாக்கியது. இதனையடுத்து, ஒன்றிய செயலாளர் மாணிக்கம் மீது திமுக ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அவரை அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பிலிருந்து தற்காலிகமாக நீக்கி வைப்பதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்தார்.

காவல்துறையினர் ஊராட்சி மன்ற தலைவர் மாணிக்கத்தை கைது செய்தனர். அவர் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டம், ஆபாச வார்த்தைகளால் திட்டுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.

இதையும் படிங்க..டேய் எப்புட்றா.. நாம் தமிழர் கட்சியில் இணைய திருமகன் ஈவெரா என்னை சந்தித்தார் - சீமான் பரபரப்பு பேச்சு

இதையும் படிங்க..இபிஎஸ். ஓபிஎஸ், டிடிவி தினகரன்..இபிஎஸ் போட்ட பிளான் - ஈரோடு கிழக்கு அதிமு வேட்பாளர் யார் தெரியுமா.?

click me!