சேலம் மாவட்டத்தில் கோவிலுக்குள் சென்று வந்த பட்டியலின வாலிபரை ஊர் மக்கள் மத்தியில் நிற்க வைத்து ஆபாச வார்த்தைகளால் திட்டிய திமுக ஒன்றிய செயலாளரை இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சேலம் மாவட்டம் சூரமங்கலம் அடுத்த திருமலைகிரியில் பட்டியலின வகுப்பைச் சேர்ந்த இளைஞர் பிரவீன்குமார் கடந்த 26ம் தேதி இரவு திருமலைகிரியில் உள்ள பெரிய மாரியம்மன் கோவிலில் கருவறை முன்பு நின்று சாமி கும்பிட வேண்டும் எ்னறு தெரிவித்துள்ளார். இதற்கு அங்குள்ள பிற சமூகத்தைச் சார்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து பிரவீன்குமார் அங்கிருந்து திரும்பி சென்றுவிட்டார்.
ஜி20 மாநாடு புதுவையில் பிச்சைகாரர்களை துரத்தி துரத்தி பிடிக்கும் அதிகாரிகள்
undefined
இதனை ஒரு பிரச்சினையாக கருதி அப்பகுதியில் உள்ள மற்ற சமூகத்தைச் சார்ந்தவர்கள் திமுகவின் சேலம் ஒன்றிய செயலாளரும் தற்போதைய திருமலைகிரி ஊராட்சி மன்றத் தலைவருமான மாணிக்கத்திடம் தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அவர் திருமலைகிரி ஊர் பெரிய மாரியம்மன் கோவில் முன்பு பஞ்சாயத்து கூட்டி கடந்த 27ம் தேதி காலை இளைஞர் பிரவீன்குமார் மற்றும் அவரது அப்பா, அம்மாவை கோவிருக்கு வருமாறு அழைப்பு விடுத்தனர்.
அரியலூரில் புயல் வேகத்தில் சென்ற தனியார் பேருந்து கவிழ்ந்து ஒருவர் பலி, பலர் படுகாயம்
அதன்படி பிரவீன்குமார் தனது குடும்பத்தினருடன் அப்பகுதிக்கு சென்றனர். அங்கு பிரவீன்குமார் மற்றும் குடும்பத்தினரை மற்ற சமூக மக்கள் முன்னிலையில் ஆபாச வார்த்தைகளால் திட்டி தீர்த்த மாணிக்கம் கொலைமிரட்டலும் விடுத்து அந்த இளைஞரை தாக்கியுள்ளார். தொடர்ந்து எங்களை பகைச்சிக்கிட்டா நீங்க தொழில் பண்ண முடியாது, இங்க இருக்க முடியாது என மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பான வீடியா இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.