காதல் திருமணம் செய்ததற்காக 3 ஆண்டுகள் பேசாத பெற்றோர்; விரக்தில் பெண் தற்கொலை

By Velmurugan s  |  First Published Jan 23, 2023, 9:59 AM IST

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே காதல் திருமணம் செய்த பெண் மூன்றாண்டுகளாக தாய், தந்தை பார்க்க வராத விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே கஞ்சியூர் பகுதியைச் சேர்ந்தவர் பொன்னுசாமி மகன் அருண். இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த சுப்பிரமணி மகள் கௌசல்யாவுக்கும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த திருணமத்தில் கௌசல்யாவின் பெற்றோருக்கு விருப்பம் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் கௌசல்யாவின் பெற்றோர் அவரிடம் பேசுவதை நிறுத்திவிட்டதாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் அருண், கௌசல்யா தம்பதிக்கு கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு பெண் குழந்தை பிறந்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக தாய் தந்தையை பிரிந்து காதல் திருமணம் செய்து கொண்ட கௌசல்யா தனக்கு குழந்தை பிறந்த நிலையிலும் கூட தாய் தந்தையர் வந்து பார்க்காததால் தொடர்ந்து மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளார். இந்த நிலையில் அருண் வேலைக்கு சென்ற நிலையில் தனியாக இருந்த கௌசல்யா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

Tap to resize

Latest Videos

undefined

நிறைவடைந்தது புத்தக கண்காட்சி.!இத்தனை கோடிக்கு புத்தகம் விற்பனையா.? அதிகமாக விற்பனையான புத்தகம் எது தெரியுமா.?

இந்த நிலையில் தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை நீண்ட நேரமாக தொடர்ந்து அழுத நிலையில் இருந்ததால் அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்துள்ளனர். அப்போது குழந்தை தொட்டிலில் அழுது கொண்டிருக்கவே, கௌசல்யா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதனை அடுத்து உடனடியாக கௌசல்யாவின் கணவர் அருணுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

ஒரு வழியாக வழிக்கு வந்த ஆர்.என்.ரவி.. ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள குடியரசு தின விழா அழைப்பிதழில் தமிழ்நாடு!

மேலும் இது தொடர்பாக பூலாம்பட்டி காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் பெண்ணின் உடலை மீட்டு எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து அருண் கொடுத்த புகாரின் அடிப்படையில் கௌசல்யாவின் இறப்பு குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருமணமாகி மூன்று ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் தாய், தந்தை பார்க்காத விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

click me!