சேலத்தில் மூட்டை மூட்டையாக புகையிலை பொருட்கள் பதுக்கல்; மூவர் கைது

By Velmurugan sFirst Published Jan 18, 2023, 11:11 AM IST
Highlights

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை சேலத்தில்  மூட்டை மூட்டையாக பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த 3 பேரை காவல் துறையினர் கைது செய்து விசாணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவர்களிடம் இருந்து 87 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களின் புழக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகம் முழுவதும் இதுபோன்ற புகையிலைப் பொருட்களை பயன்படுத்தவும், விற்பனை செய்யவும் தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து புகையிலை பொருட்களை விற்பனை செய்யும் கடைகள், கிடங்குகளில் சோதனை மேற்கொண்டு சட்டப்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குளித்தலை ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு முட்டி சிகிச்சை பெற்றுவந்த வீரர் பலி

அதன்படி சேலம் களரம்பட்டி பகுதியில் உள்ள ஒருவரின் வீட்டில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிச்சிப்பாளையம் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், காவல் நிலைய ஆய்வாளர் சீனிவாசன் தலைமையிலான காவல் துறையினர் அப்பகுதியில் உள்ள குணசீலன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் சோதனை செய்தனர். 

பொங்கல் விடுமுறையை கொண்டாட தாத்தா வீட்டிற்கு சென்ற சிறுவன் ஆற்றில் மூழ்கி பலி

சோதனையின் போது அவரது வீட்டிலும், அருகில் மளிகை கடை நடத்தி வரும் தர்மன், ஜெய்குமார் ஆகியோரின் கடைகளிலும் மூட்டை மூட்டையாக குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து சுமார்  87 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த காவல் துறையினர் தர்மன், குணசீலன், ஜெய்குமார் ஆகிய 3 பேரை கைது செய்தனர். விசாரணையில் பெங்களூருவில் இருந்து இவர்கள் புகையிலை பொருட்களை கடத்தி வந்து சேலத்தில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

click me!