சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த காடையாம்பட்டி அருகே இரண்டு கார்கள் மோதிக் கொண்ட கோர விபத்தில் ஒரு கார் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. அதிர்ஷ்டவசமாக காரில் பயணம் செய்த ஐந்து பேரும் உயிர்தப்பினர்.
சேலம் மாவட்டம், ஓமலூரை அடுத்த காடையாம்பட்டி அருகே உள்ள எலத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் முரளி. இவருடைய மகளுக்கு இன்று மஞ்சள் நீராட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக முரளி காரில் எலத்தூரில் இருந்து தீவட்டிப்பட்டிக்கு இலை வாங்குவதற்காக எலத்தூர் அருகே உள்ள நெடுஞ்சாலையை கடக்க முயன்றுள்ளார்.
அப்பொழுது சேலத்தில் இருந்து பெங்களூரு நோக்கி ஸ்கோடா கார் வேகமாகச் சென்று முரளியின் கார் மீது மோதியது, வேகத்தை கட்டுப்படுத்த முடியாத நிலையில் கார் மீண்டும் தேசி நெடுஞ்சாலையின் தடுப்பு சுவர் மீது மோதி தீ பற்றி கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது.
undefined
700 ஆண்டுகள் பழமையான காளியம்மன் கோவிலில் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்திய காவல்துறையினர்
இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் காரில் ஏற்பட்ட தீயை அணைக்க முடியவில்லை. இருப்பினும் அதிர்ஷ்டவசமாக காரில் சென்ற ஐந்து பேர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். காயமடைந்த அனைவரையும் பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு துறையினர் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த காரை தண்ணீரை பீச்சி அடித்து அணைத்தனர். ஆனாலும் அந்த கார் முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது. மற்றொரு காரின் முன் பகுதியும் விபத்தில் சேதமடைந்தது. இந்த விபத்தினால் சேலத்தில் இருந்து பெங்களூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
Airtel வழங்கும் Netflix பிரீமியம் ஆஃபர்! முழு விவரங்கள் இதோ!!
வாகனங்கள் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வரிசையாக நின்றன. தொடர்ந்து அங்கு சென்ற போக்குவரத்து காவல் துறையினர் விபத்தில் சிக்கிய இரண்டு கார்களையும் அப்புறப்படுத்தினர். இதனைத் தொடர்ந்து வாகனங்கள் அணிவகுத்து சென்றன. நடுரோட்டில் கார் தீ பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.