பெற்றோர்களால் கட்டிட வேலை செய்து போதிய வருவாய் ஈட்ட முடியாமல் பிள்ளைகளைக் காப்பாற்ற போராடி வந்த நிலையில் மூத்த மகள் திவ்யாக்கு மூக்கு கண்ணாடி வாங்கி தர இயலவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பெற்றோருக்கு ஆண்டுக்கு ஒரு முறை தன்னால் மருத்துவ செலவு ஏற்படுவதாகவும், எனக்கு பின்னால் உள்ள தம்பி தங்கையை காப்பாற்ற பெற்றோர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருவதாகவும் திவ்யா நினைத்தார்.
11ம் வகுப்பு பயிலும் மாணவி பெற்றோர்களுக்கு மருத்துவ செலவு வைக்க கூடாது என கருதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே சித்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி மெய்யப்பன். இவரது மனைவி மைகிளி. இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் மூத்த மகள் திவ்யா (16), சித்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். அவருக்கு கடந்த ஆண்டு கண் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் சிகிச்சைக்கு பிறகு அவருக்கு மூக்கு கண்ணாடி அணிய வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
undefined
இதையும் படிங்க;- விடிய விடிய விசாரணை.. விவேக் ஜெயராமனின் மாமனார் அதிரடி கைது.. என்ன காரணம் தெரியுமா?
ஆனால் அவரது பெற்றோர்களால் கட்டிட வேலை செய்து போதிய வருவாய் ஈட்ட முடியாமல் பிள்ளைகளைக் காப்பாற்ற போராடி வந்த நிலையில் மூத்த மகள் திவ்யாக்கு மூக்கு கண்ணாடி வாங்கி தர இயலவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பெற்றோருக்கு ஆண்டுக்கு ஒரு முறை தன்னால் மருத்துவ செலவு ஏற்படுவதாகவும், எனக்கு பின்னால் உள்ள தம்பி தங்கையை காப்பாற்ற பெற்றோர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருவதாகவும் திவ்யா நினைத்தார்.
இந்நிலையில், திவ்யா காலையில் பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு மீண்டும் பெற்றோர் வேலைக்கு சென்ற நேரத்தில் வீடு திரும்பியுள்ளார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வேலைக்கு சென்றுவிட்டு தாய் வீடு திரும்பிய போது வீட்டின் கதவு உள்புறம் தாழ்பாள் போடப்பட்டு இருந்ததால், நீண்ட நேரம் தட்டியும் கதவு திறக்கவில்லை. இதனால், சந்தேகமடைந்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மூத்த மகள் தூக்கில் தொங்கியதை கண்டு பார்த்து அதிர்ச்சியில் அலறி கூச்சலிட்டபடி கதறினார்.
இதையும் படிங்க;- கட்டிலில் கட்டிப்புரண்டு கள்ளக்காதலனுடன் மனைவி உல்லாசம்! நேரில் பார்த்த கணவர்!இறுதியில் என்ன நடந்தது தெரியுமா?
இந்த சம்பவம் தொடர்பாக பூலாம்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் திவ்யா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே, மாணவி திவ்யா எழுதிய கடிததம் ஒன்று சிக்கியது. அதில், என் தற்கொலைக்கு நான் மட்டுமே காரணம் வேறு யாரும் காரணம் இல்லை. என்னால் ஆண்டுக்கு ஒரு முறையாவது செலவையாவது தற்பொழுது இருக்காது. அதனால் நான் இந்த முடிவை எடுத்து உள்ளேன் என்று எழுதி வைத்துள்ளார். இந்த கடிதத்தை கைப்பற்றிய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.