சேலத்தில் 800 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் அழிப்பு; ஒருவர் கைது

By Velmurugan s  |  First Published Jan 8, 2023, 3:04 PM IST

சேலம் மாவட்டம் கருமந்துறை மலைப்பகுதியில் 800 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் மற்றும் 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டு தனிப்படை காவல் துறையினரால் அழிக்கப்பட்டது. 


சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவகுமாரின் அறிவுறுத்தலின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் கள்ளச்சாராயம் தடுப்பு சோதனை தீவிர படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக சேலம் மாவட்டம் கருமந்துறை மலைப்பகுதிகளில் உள்ள மலை கிராமங்களில் கள்ளச்சாராயம் தடுப்பு சோதனை அதிகப்படுத்தப்பட்டுள்ளது.

மக்களை வருத்தி லாபம் சம்பாதிப்பதா? பெட்ரோல் விலையை ரூ.10 குறைக்க ராமதாஸ் கோரிக்கை

Tap to resize

Latest Videos

undefined

இந்த நிலையில் இன்று கருமந்துறை முடவன் கோயில் குன்னூர் ஓடை பகுதியில் சேத்தூரைச் சேர்ந்த ராமராஜ் என்பவர் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பதாக தனிப்படை காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அந்த பகுதிக்குச் சென்ற தனிப்படை காவல் துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டதில் ஓடை பகுதியில் 800 லிட்டர் கள்ளச்சாராயம் ஊறல் போடப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அவற்றை எடுத்து அழித்தனர்.

மெட்ரோ ரயிலில் மீன், இறைச்சி கொண்டு செல்ல தடை; பயணிகள் கொந்தளிப்பு

அதேபோல 20 லிட்டர் கள்ளச்சாராயமும் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. இது தொடர்பாக சேத்தூரைச் சேர்ந்த ராமராஜ் கைது செய்யப்பட்டு ஆத்தூர் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் கருமந்துறை வனப்பகுதிகளில்  கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்பட்டு வருவதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

click me!