சுவாசத்தின் மூலம் இரைப்பை புற்று நோயை முன்கூட்டியே கண்டறியும் புதிய சாதனைத்தை கண்டுபிடித்து சேலம் பெரியார் பல்கலைக்கழக கணினி அறிவியல் துறை சாதனை படைத்துள்ளது.
தமிழகம் மட்டுமல்லாது, இந்தியா முழுமைக்கும் தொடர்ந்து அதிகரித்து வரும் மேற்கத்திய கலாசாரத்தின் ஈர்ப்பு காரணமாக நாம் உண்ணும் உணவு முறை, பாக்கெட்டுகளில் பதப்படுத்தி வைக்கப்பட்ட நொறுக்கு தீவனங்கள் உள்ளிட்டவற்றின் காரணமாக நாளுக்கு நாள் புற்று நோயால் பாதிப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்துகொண்டே வருகிறது.
புற்று நோயை முன்கூட்டியே கண்டுபிடிக்கும் பட்சத்தில் அதனை எளிதில் குணப்படுத்த முடியும். ஆனால், முன்கூட்டியே கண்டுபிடிக்கும் வசதி நம்மிடையே சற்று குறைவு. இதனால் புற்று நோயால் பாதிக்கப்பட்டு இறப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அதிலும் குறிப்பாக புற்று நோய் வகைகளில், இரைப்பை புற்று நோய் இரண்டாவது இடத்தில் உள்ளது.
தமிழகத்தில் ஆப்ரிகன் பன்றி காய்ச்சல்; வளர்ப்பு பன்றிகளை விற்க தடை
இந்நிலையில், இரைப்பை புற்றுநோயை முன்கூட்டியே அறியும் வகையில் புதிய சாதனத்தை சேலம் பெரியார் பல்கலைக்கழக கணினி அறிவியல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இந்த கண்டுபிடிப்பு குறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் முன்னிலையில் விளக்கம் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் கூறுகையில், “பொதுமக்களுக்கு பயன்படும் வகையில், பெரியார் பல்கலைக்கழகம் சார்பில் பல்வேறு கண்டுபிடிப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், சுவாசத்தின் மூலம் இரைப்பை புற்றுநோயை கண்டறிவது குறித்த ஆய்வு கணினி அறிவியல் துறை தலைவர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது.
ஆளுநர் ரவியின் கருத்துக்கு எதிர்ப்பு; இந்திய அளவில் டிரெண்டான தமிழ்நாடு வார்த்தை
ஆய்வுடன் நின்றுவிடாமல் கணினி அறிவியல் துறை தொழில்நுட்ப தொழில் முனைவோர் ஆராய்ச்சி பூங்கா வாயிலாக ஸ்மார்ட் சாதனமும் உருவாக்கப்பட்டுள்ளது. புற்றுநோயயை எளிதாகக் கண்டறியும் வகையில் இந்த ஸ்மார்ட் சாதனம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சாதனத்தின் செயல்பாட்டினை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று வி்ரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.