ஏற்காட்டில் பயங்கர சத்தத்துடன் நில அதிர்வு

By Velmurugan s  |  First Published Jan 28, 2023, 9:48 AM IST

சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பகுதியில் பகல் 12 மணியளவில் பயங்கர சத்தம் ஒன்று கேட்டுள்ளது. மேலும் இதன் விளையாவக லேசான நில அதிர்வு உணரப்பட்ட நிலையில், பொதுமக்கள் அச்சத்துடன் தங்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடிவந்தனர்.


சேலம் மாவட்டம் ஏற்காட்டில் நேற்று பகல் 12 மணியளவில் பயங்கர சத்தம் கேட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சுமார் 2 விநாடிகளுக்கு லேசான நில அதிர்வு உணரப்படவே, அச்சமடைந்த பொது மக்கள் உடனடியாக தங்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர். இந்த அதிர்வானது ஏற்காடு டவுண் மட்டுமின்றி சுற்றியுள்ள கிராமங்களிலும் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திடீரென உணரப்பட்ட நில அதிர்வு காரணமாக அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். இது தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டதற்கு, நில அதிர்வு குறித்து டெல்லியில் உள்ள அலுவலகத்தில் இருந்து தான் தகவல் வரவேண்டும். அப்படி வரும் பட்சத்தில் தெரியபடுத்துவதாக தெரிவித்துள்ளனர்.

Tap to resize

Latest Videos

click me!