சேலத்தில் பொய் வழக்கு பதிவு செய்த காவல்துறையினரை கண்டித்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் தீக்குளிக்க முயற்சி செய்து தர்னாவில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டம் களரம்பட்டி பகுதியை சேர்ந்தவர் கோழி பாஸ்கர். இவர் மீது சேலம் மாநகர காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு வழக்கு ஒன்றில் நீதிமன்றத்திற்கு சென்று கையெழுத்திட்டு திரும்பி வந்தபோது அன்னதானப்பட்டி காவல் துறையினர் கோழி பாஸ்கரை விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆனால் காவல் துறையினர் தற்போது வரை எந்த ஒரு வழக்கும் பதிவு செய்யாமல் அவரை மறைத்து வைத்து சித்திரவதை செய்வதாக கூறி, கோழி பாஸ்கரின் மனைவி, மகள்கள், தாய், சகோதரி என ஏழு பேர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தனர்.
மூதாட்டியை கொலை செய்து குவளையில் அடைத்து வைத்த பேத்தி கைது
மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நுழைவாயில் முன்பு தர்ணாவிலும் ஈடுபட்டனர் இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை காவல் துறையினர் கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் சேலம் மாநகர காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை கைது செய்து குண்டு கட்டாக இழுத்துச் வாகனத்தில் அழைத்துச் சென்றனர். இதனால் பெண்கள் கூச்சலிட்ட சம்பவம் அப்பகுதி பரபரப்பு ஏற்பட்டது.
கொடுத்த கடனை திருப்பி கேட்ட சாமியரை காவல் துறையில் சிக்க வைத்த பலே பெண்மணி