தமிழ்நாடு மற்றும் குஜராத் இடையிலான பிணைப்பை சௌராஷ்டிரா தமிழ் சங்கம் வலுப்படுத்துகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
சென்னை, மதுரை, திருச்சி, திண்டுக்கல், பரமக்குடி, சேலம், கும்பகோணம், தஞ்சாவூர், திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் குஜராத் மற்றும் தமிழ்நாடு இடையிலான கலாசசார உறவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நிகழச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. சௌராஷ்டிரா தமிழ் சங்கம் திட்டத்திற்கு அடித்தளம் போட்டவர் பிரதமர் நரேந்திர மோடி.
மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவிலில் வெண்ணைத்தாழி திருவிழா; சுவாமி மீது வெண்ணை வீசி வழிபாடு!
சௌராஷ்டிரா தமிழ் சங்கம் திட்டத்தின் ஒரு பகுதியாக குஜராத், தமிழ்நாட்டிற்கு இடையிலான ஆன்மீக சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், எம் எல் ஏக்கள் என்று பலரும் கலந்து கொண்டு தாண்டியா ஆட்டம், கோலாட்டம் ஆடி வருகின்றனர். சேலம் மாவட்டத்திற்கு சென்ற எம்எல்ஏ ஜெகதீஷிற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
உலக வாய் சுகாதார தினம்: மருத்துவ கல்லூரி மாணவ, மாணவிகள் நடனமாடி விழிப்புணர்வு!
இந்த நிலையில், சேலம் சென்ற எம் எல் ஏவின் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு மற்றும் குஜராத் இடையிலான பிணைப்பை சௌராஷ்டிரா தமிழ் சங்கம் வலுப்படுத்துகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
காதலிக்க மறுத்த பெண்ணுக்கு கத்திக்குத்து: கல்லூரி மாணவர் தலைமறைவு!