எடப்பாடி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து; ஒருவர் பலி, ஒருவர் கவலைக்கிடம்

By Velmurugan s  |  First Published Mar 24, 2023, 10:21 AM IST

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே திடீரென ஏற்பட்ட வெடித்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் மற்றொருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 


சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே வெள்ளாளபுரம் கிராமத்தைச் சேர்ந்த குமார் என்பவருக்கு சொந்தமான வானவெடி தயாரிக்கும் குடோனில் நேற்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அறையில் வைக்கப்பட்டிருந்த வெடிப்பொருட்கள் வெடித்துச் சிதறின. இதில் அமுதா என்ற பெண் தொழிலாளி உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

மேலும் இந்த விபத்தில் பலத்த தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் வேடப்பன் என்பவர் சேலம் அரசு மருத்துவமனைக்கு உயர் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளார். இந்த விபத்துக்கு குறித்து கொங்கணாபுரம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் பட்டாசு ஆலையின் உரிமையாளர் குமாரை கொங்கணாபுரம் காவல் துறையினர் கைது செய்தனர். 

Tap to resize

Latest Videos

undefined

கோவையில் சாப்பிட்ட கேக்குக்கு பணம் தர மறுத்து கடையை சூறையாடிய இளைஞர்களால் பரபரப்பு

விபத்து குறித்து கொங்கணாபுரம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பட்டாசு ஆலை உரிமையாளரிடம் காவல் துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

click me!