சேலத்தில் முன்விரோதம் காரணமாக பெண் காவல் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு காவல்துறையில் ஊர் காவல் படை காவலராக பணியாற்றி வருபவர் அஞ்சலி தேவி. இவர் சேலம் அருகே அயோத்தியாபட்டணம் பகுதியைச் சேர்ந்தவர். அரசு வேலை வாங்கித் தருவதாக கிச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் பணத்தை பெற்றுக் கொண்டு ஏமாற்றிவிட்டதாக, கிச்சிப்பாளையம் காவல் நிலையத்தில் அஞ்சலி தேவி புகார் அளித்துள்ளார்.
இது தொடர்பாக சதீஷ்குமார், அஞ்சலிதேவிக்கு இடையே ஏற்கனவே தகராறு இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் அஞ்சலி தேவி தனது பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பிக் கொண்டு இருந்தார். அப்போது பழைய பேருந்து நிலையம் பகுதியில் சதீஷ்குமார் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தி அஞ்சலிதேவியை சரமாரியாக குத்தினார்.
ஓசூரில் படுஜோராக அரங்கேரிய விபசாரம்; 3 பெண்கள் மீட்பு - ஓட்டல் உரிமையாளர் கைது
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்தவர்கள் சதீஷ்குமாரை பிடித்து சேலம் டவுன் நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். காயமடைந்த அஞ்சலிதேவியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அஞ்சலி தேவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பேருந்து பகுதியில் பெண் காவலர் மீது கத்தி குத்து நடந்த சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் 12 வயது சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை; சிறுவன் உள்பட 3 பேர் கைது