பொது தேர்வுக்கு படிக்க விடாமல் பாலியல் தொந்தரவு; அதிமுக பிரமுகர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு

By Velmurugan s  |  First Published Mar 21, 2023, 11:32 AM IST

12ம் வகுப்பு பொது தேர்வுக்கு படிக்க விடாமல் பாலியல் தொந்தரவு தரும் வளர்ப்பு தந்தை உள்ளிட்ட இருவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சிறுமி சேலம் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.


சேலம் மாவட்டம் கோரிமேடு சின்ன கொல்லபட்டி பகுதியைச் சேர்ந்த சிறுமி மற்றும் அவரது மாமா இருவரும் இன்று மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்திற்கு வந்தனர். மாநகர காவல் ஆணையாளரிடம் புகார் மனு அளித்துவிட்டு செய்தியாளர்களிடம் கூறும் போது நான் அனாதை இல்லத்தில் இருந்தபோது சிறுவயதிலேயே என்னை அதிமுக பிரமுகர் சண்முகம் தத்து எடுத்தார்.

தத்து எடுத்த நாள் முதல் சரிவர உணவு வழங்காமல் அவ்வப்போது திட்டி வந்தே இருந்துள்ளார். இந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டு காலமாக வளர்ப்பு தந்தையான சண்முகம் மற்றும் வீட்டில் குடியிருக்கும் மணி என்பவரும் தினமும் மது அருந்திவிட்டு என்னிடம் தகாத வார்த்தையில் பேசியும், பாலியல் தொந்தரவு அளிக்கிறார். இது குறித்து தாய் கேட்க சென்றாள் தாயையும் மிரட்டுகின்றனர்.

Tap to resize

Latest Videos

undefined

பாலியல் மன்னன் பாதிரியார் பெனட்டிக் ஆன்டோ அதிரடி கைது

இந்த நிலையில் வளர்ப்பு தந்தை உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கன்னங்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தால் கட்சியை சேர்ந்தவர்கள் என்பதால் புகாரை பெறாமல் காலம் தாழ்த்துகின்றனர். தற்போது பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி வரும் வேளையில் எனக்கு சரிவர உணவு வழங்காமல் மது அருந்திவிட்டு பாலியல் தொந்தரவு செய்வதால் என்னால் சரிவர படிக்க முடியாமல் தவித்து வருகிறேன். எனவே உரிய நடவடிக்கை எடுத்து எனக்கு வசிப்பதற்கும், படிப்பதற்கும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

தமிழகத்தில் திடீரென அதிகரிக்கும் கொரோனா.. அடுத்து என்ன செய்யலாம்? அவசர ஆலோசனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.!

இது குறித்து காவல்துறையினர் உரிய விசாரணை நடத்தப்படும் என நம்பிக்கை அளித்துள்ளதாக கூறினார். பாலியல் தொந்தரவு தரும் வளர்ப்பு தந்தை உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட சிறுமி மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளிக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

click me!