சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கையில் துப்பாக்கியோடு வலம் வந்த பெண்ணால் பரபரப்பு

By Velmurugan s  |  First Published Mar 20, 2023, 5:12 PM IST

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துப்பாக்கியுடன் வலம் வந்த பெண்களால் ஆட்சியர் அலுவலகத்தில் சற்று பதற்றமான நிலை ஏற்பட்டது.


சேலம் மாவட்டம் ஏற்காடு அசம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிவேல். மூன்றரை ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வந்தார். நிலத்தின் பாதுகாப்பிற்காக உரிமம் பெற்று கடந்த 25 ஆண்டுகளாக துப்பாக்கி வைத்திருந்துள்ளார். மேலும் ஏற்காடு காவல் நிலையத்தில் உரிமத்தை ஆண்டுதோறும் புதுப்பித்துக் கொண்டு இருந்துள்ளார். 

இந்த நிலையில் கடந்த 2021ம் ஆண்டு உடல்நலம் பாதிக்கப்பட்டு பழனிவேல் உயிரிழந்த நிலையில், தங்களுக்கு துப்பாக்கி பயன்படாது என்று கூறி, பழனிவேலின் மனைவி பார்வதி, மகள் சுமதி ஆகிய இருவரும் துப்பாக்கியை கையில் எடுத்துக்கொண்டு ஆட்சியரிடம் ஒப்படைக்க சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வலம் வந்தனர்.

Latest Videos

undefined

தமிழ் கலாசாரமும், நாகரிகமும் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது - ஆளுநர் ரவி புகழாரம்

ஆட்சியர் அலுவலகத்தில் பெண்கள் இருவர் துப்பாக்கியுடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். பின்னர் துப்பாக்கியை ஒப்படைக்க ஆர்டிஓ அலுவலகத்திற்கு செல்லுமாறு கூறி அவர்களை அனுப்பி வைத்தனர். ஆட்சியர் அலுவலகத்தில் பெண் துப்பாக்கியுடன் வலம் வந்த சம்பவம் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவையில் பயங்கரம்; சீறிப்பாய்ந்த இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்து 2 பேர் பலி

click me!