சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே 2 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், இருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த மேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் யுதராசாமி மகன் பிரகாஷ். வேட்டுப்பட்டியிலிருந்து எடப்பாடி நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது எதிர் திசையில் எடப்பாடியில் இருந்து சிலுவம்பாளையம் செல்லும் போது தம்பா கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த உத்தர சாமி மற்றும் அவரது மகன் கவின் இருவரும் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர்.
எதிர்பாராத விதமாக இந்த 2 இருசக்கர வாகனங்களும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் வேட்டுவபட்டி பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதேபோல் தம்பா கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த உத்திரசாமி மற்றும் அவரது மகன் கவின் பலத்த காயங்களுடன் எடப்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இலவச கல்வி என்ற பெயரில் கட்டண கொள்ளையில் ஈடுபடும் தனியார் பள்ளி - பெற்றோர் புகார்
சம்பவ இடத்திலேயே உயிரிழந்த பிரகாஷின் உடலை எடப்பாடி காவல் துறையினர் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து எடப்பாடி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவையில் ரயில் மோதி முதியவர் பலி; உயிரிழந்தவரின் தலை மாயமானதால் காவல்துறை விசாரணை