“காளியம்மாள் எனும் நான்” கெத்தாக மாட்டு வண்டியில் வந்து மனு தாக்கல் செய்த நாம் தமிழர் வேட்பாளர்

By Velmurugan s  |  First Published Mar 25, 2024, 7:45 PM IST

நாம் தமிழர் கட்சியின் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி வேட்பாளர் காளியம்மாள் மாட்டு வண்டியில் வந்து தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.


மயிலாடுதுறையில் நாம் தமிழர் கட்சி சார்பாக இன்று அக்கட்சியின் வேட்பாளர் காளியம்மாள் மாட்டு வண்டியில் ஊர்வலமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தடைந்தனர். பின்னர் மாவட்ட தேர்தல் அதிகாரி மகாபாரதியிடம் வேட்பு மனு தாக்கல் செய்து உறுதிமொழி எடுத்துக் கொண்டார். அதன் பின் ஆட்சியர் அலுவலக வாயிலில் செய்தியாளருக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழ்நாட்டில் மூன்றாவது பெரிய கட்சியாக இருந்த எங்கள் கட்சியின் சின்னத்தை பிடுங்கி தேர்தல் அதிகாரிகள் ஒரு சாதாரண கட்சிக்கு கொடுத்து விட்டார்கள். 

திருப்பூர் குமரன் சிலைக்கு பட்டையடித்த பாஜக வேட்பாளர்; பாஜகவினரின் செயலால் பரபரப்பு

Latest Videos

இந்த சின்னம் எங்களுக்கு வேண்டும் என்று பல நாட்களாக போராடி வருகிறோம். தேர்தல் சின்னம் இல்லாவிட்டாலும் நாங்கள் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்துக் கொண்டுதான் உள்ளோம். தேர்தலில் நிற்ககக்கூடிய அனைத்து கட்சியினரும் தனக்கான சின்னத்தை கையில் வைத்துக் கொண்டு வாக்கு சேகரித்துக் கொண்டுள்ளனர். ஆனால் நாங்களோ சின்னமே இல்லாமல் ஒரு துண்டறிக்கையும் இல்லாமல் வாக்கு சேகரித்துக் கொண்டிருக்கிறோம். மிகவும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளோம். 

பங்குனி உத்திரம்; அண்ணாமலையார் ஆலயத்தில் வெகு விமரிசையாக நடைபெற்ற திருக்கல்யாண வைபவம்

நாளைய தினம் எங்களுக்கு சின்னம் வழங்குகிறோம் என்று தேர்தல் அதிகாரிகள் கூறியுள்ளார்கள். அதனை நம்பி நாங்கள் தேர்தலில் வாக்கு சேகரித்துக் கொண்டிருக்கிறோம். இது திராவிட அரசியல் என்று இருந்த நிலை மாறி நாம் தமிழர் அரசியல் என்ற நிலை வரும். பொது மக்களின் பிரச்சினைகளை சரி செய்தாலே பாதி குறை மக்களிடம் இருந்து தீர்ந்துவிடும் விவசாயிகளுக்கு தண்ணீர் பிரச்சனை, நிலம், வளம் சார்ந்த பிரச்சனை, சர்க்கரை ஆலைகள் மூடப்பட்டுள்ளன. நான் வெற்றி பெற்றால் மிக விரைவில் அதனை திரும்ப இயங்க செய்வேன் என்றார்.

click me!