சீர்காழியில் பிரபல ரௌடி மனைவியின் துப்பட்டாவில் தூக்கிட்டு தற்கொலை; திருமணமான சில நாட்களில் நடந்த சோகம்

By Velmurugan s  |  First Published Mar 22, 2024, 4:14 PM IST

சீர்காழியில் பிரபல ரௌடி திருமணமான சில நாட்களிலேயே தனியார் விடுதியில் மனைவியின் துப்பட்டாவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த சுனாமி குடியிருப்பு மீனவர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன். இவரது மகன் அருண் (வயது 25). இவர் பூம்புகார் அருகே 24 வயது மதிக்கதக்க ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு அந்த பெண்ணுடன்  தரங்கம்பாடி கடற்கரையில் திருமணம் செய்து கொண்டுள்ளார். பின்னர் இருவரும் வேளாங்கண்ணி வந்து தனியார் விடுதியில் தங்கி இருந்துள்ளனர். 

தேர்தலுக்கு பின் சுவையான ஆட்டு பிரியாணி காத்திருக்கிறது; அண்ணாமலையை மறைமுகமாக பங்கம் செய்த அமைச்சர்

Latest Videos

அப்போது இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏறபட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சல் ஏற்பட்டு  இரவில் மின் விசிரியில் துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த  வேளாங்கண்ணி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

NDA கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும்; அவசரத்தில் கூட்டணியை மாற்றி சொன்ன திமுக முதன்மை செயலாளர்

இதுகுறித்து வேளாங்கண்ணி போலீசார்  வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து விசாரித்து வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட நபர் மீது பூம்புகார் காவல் நிலையத்தில் 3 வழக்குகள்  நிலுவையில் உள்ளதாக காவல் துயைினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தனியார் விடுதியில் இருவரும் அறை எடுக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.

click me!