திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் டிடிவி தினகரன் துணைவியாரோடு சிறப்பு பிரார்த்தனை

By Velmurugan sFirst Published Mar 1, 2024, 12:23 PM IST
Highlights

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் இன்று தனது துணைவியாரோடு சிறப்பு பிரார்த்தனை மேற்கொண்டார்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான உலக புகழ்பெற்ற பெற்ற ஸ்ரீ அபிராமி சமேத ஶ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. அப்பர், சுந்தர், சம்பந்தர் ஆகிய மூவரால் தேவாரப்பாடல் பெற்றதும், பக்தர் மார்க்கண்டேயனுக்காக சிவபெருமான் காலசம்ஹாரமூர்த்தியாக எழுந்தருளி எமனை காலால் எட்டி உதைத்து சம்ஹாரம் செய்தது உள்ளிட்ட பல்வேறு புராண நிகழ்வுகளை உள்ளடக்கிய உலகப்புகழ்பெற்ற திருத்தலமாக விளங்குகிறது. 

இத்தலத்தில் ஆயுள் ஹோமம் மற்றும் 60 வயது தொடங்குபவர்கள் உக்கிர ரத சாந்தி, 60 வயது பூர்த்தி அடைந்தவர்கள் சஷ்டியப்த பூர்த்தி, 70 வயதில் பீமரத சாந்தி, 80 வயது பூர்த்தி அடைந்தவர்கள் சதாபிஷேகம், 90 வயது அடைந்தவர்கள் கனகாபிஷேகம், 100 வயது பூர்த்தி அடைந்தவர்கள் பூர்ணாபிஷேகம் செய்து சுவாமி அம்பாளை வழிபட்டால் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது ஐதீகம். வருடம் 365 நாட்களும் திருமணம் நடைபெறும் ஓரே தலமாகும்.

காவிரி விவகாரம்: பாஜக, காங்கிரஸ் யார் ஆட்சி செய்தாலும் வஞ்சிக்கப்படுவது தமிழகம் தான் - பழனிசாமி பேச்சு

இத்தகைய சிறப்பு வாய்ந்த திருக்கடையூர் கோவிலுக்கு இன்று காலை அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் தனது 60 வயது பூர்த்தியடைந்ததை அடுத்து அவரது மனைவி  அனுராதாவுடன் வருகை வந்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் கோபூஜை, கஜ பூஜை செய்த பின்னர் கோவிலுக்குள்ளே சென்று கள்ள வார்ண விநாயகர், ஸ்ரீ காலசம்கார மூர்த்தி, ஶ்ரீ அமிர்தகடேஸ்வரர் மற்றும் அபிராமி அம்மன் சன்னதியில் சென்று சிறப்பு அர்ச்சனை செய்து வழிபாடு செய்தார்.

விபத்தில் காயமடைந்த நபர்: ஓடி வந்து மீட்ட அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா!

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் கூறுகையில், 60 வயது பூர்த்தி அடைந்ததை அடுத்து அமிர்தகடேஸ்வரர் அபிராமி அம்பாளின் அனுகிரகத்தை பெறுவதற்காக வந்துள்ளோம். ஏற்கனவே எங்களுக்கு குக்கர் சின்னம் உள்ளது. வதந்திகள், பொய் செய்திகள் மற்றும் யூகங்களை வைத்து கேட்காதீர்கள். கொஞ்சம் நாள் பொருத்திருங்கள். உங்களது கேள்விகளுக்கு உறுதியான விடை கிடைக்கும். நானும், ஓபிஎஸ்யும் வருங்காலத்தில் அரசியலில் இணைந்து செயல்படுவோம் என ஏற்கனவே முடிவு எடுத்துள்ளோம். கூட்டணிக்காக சில கட்சிகளுடன் பேசிக் கொண்டிருப்பது உண்மை. கூட்டணி குறித்த இறுதி வடிவம் எட்டிய பிறகு உங்களிடம் தெரிவிக்கிறோம் என்றார்.

click me!