சீருடையில் பாஜகவில் இணைந்த காவல் உதவி ஆய்வாளா்கள்.. அதிரடி நடவடிக்கை எடுத்த தஞ்சை சரக டிஐஜி!

Published : Jan 03, 2024, 02:09 PM ISTUpdated : Jan 03, 2024, 02:12 PM IST
சீருடையில் பாஜகவில் இணைந்த காவல் உதவி ஆய்வாளா்கள்.. அதிரடி நடவடிக்கை எடுத்த தஞ்சை சரக டிஐஜி!

சுருக்கம்

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். தனது நடைபயணத்தில் பிரதமர் மோடியின் 9 ஆண்டு கால சாதனைகளை விளக்கிக் கூறி வரும் அண்ணாமலை, தமிழகத்தில் ஆளுங்கட்சியாக திமுகவுக்கு எதிராகவும் பிரச்சாரம் செய்து வருகிறார். 

நாகையில் சீருடையில் பாஜகவில் இணைந்த காவல் உதவி ஆய்வாளர்கள் இரண்டு பேர் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். தனது நடைபயணத்தில் பிரதமர் மோடியின் 9 ஆண்டு கால சாதனைகளை விளக்கிக் கூறி வரும் அண்ணாமலை, தமிழகத்தில் ஆளுங்கட்சியாக திமுகவுக்கு எதிராகவும் பிரச்சாரம் செய்து வருகிறார். 

இதையும் படிங்க;- இரண்டு கால்கள் துண்டான தந்தை.. உடல் நசுங்கி உயிரிழந்த பள்ளி மாணவி.. நடந்தது என்ன?

இந்நிலையில், கடந்த டிசம்பர் 27ஆம் தேதி அண்ணாமலை மேற்கொண்ட நடை பயணத்தின் போது  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள் ராஜேந்திரன், கார்த்திகேயன் ஆகிய இருவரும் காவல் சீருடையில் இருந்தவாறு பாஜகவில் தங்களை இணைத்து கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. 

இதையும் படிங்க;-  தமிழர் திருநாளை ஏழைகள் கொண்டாட வேண்டாமா? பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.1000 நிறுத்துவது நியாயமா? ராமதாஸ்.!

இந்நிலையில், தஞ்சை சரக டிஐஜி உத்தரவின்பேரில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள் ராஜேந்திரன், கார்த்திகேயன் ஆகிய இருவரும் நாகப்பட்டினம் ஆயுதப்படை பிரிவுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். ஏற்கனவே நீலகிரியில் என் மண் என் மக்கள் நடைபயணத்தின் போது Hill Cop Patrol காவலர் கணேசன் சீருடையோடு அண்ணாமலையோடு புகைப்படம் எடுத்துக் கொண்டது வைரலானது. இதனையடுத்து காவலர் கணேசன் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

நாகையில் கொளுத்தும் வெயில்; திடீரென மயங்கி விழுந்த பெண் - தவெக கூட்டத்தில் பரபரப்பு
DSPக்கே பாதுகாப்பு இல்லையா? எனக்கு உயிர் முக்கியம்! DSP சுந்தரேசன் பகீர் குற்றச்சாட்டு