கணவருடன் மாலை மாற்றி திருக்கடையூரில் வானதி சீனிவாசன் சிறப்பு வழிபாடு; அண்ணாமலை பெயரில் சிறப்பு அர்ச்சனை

Published : Nov 23, 2023, 12:50 PM IST
கணவருடன் மாலை மாற்றி திருக்கடையூரில் வானதி சீனிவாசன் சிறப்பு வழிபாடு; அண்ணாமலை பெயரில் சிறப்பு அர்ச்சனை

சுருக்கம்

பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் தனது கணவருடன் சிறப்பு தரிசனம் மேற்கொண்டார்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் உள்ள ஆயுள் விருத்தி தரும் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவியும், கோயம்புத்தூர் தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான வானதி சீனிவாசன் சுவாமி தரிசனம் செய்தார். கணவர் சீனிவாசனுக்கு 60 வயது பூர்த்தி அடைந்ததை அடுத்து கோவிலுக்கு வந்த வானதி சீனிவாசனுக்கு பாஜக மாவட்டத் தலைவர் அகோரம், கோயில் நிர்வாகி விருதகிரி சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தனர். 

தொடர்ந்து சிரித்த முகத்துடன் ஆலயத்தில் கஜ பூஜை, கோ பூஜை செய்து பிள்ளையார், ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர், ஸ்ரீகாலசம்ஹார மூர்த்தி, ஸ்ரீஅபிராமி சன்னதியில் கணவருடன் தரிசனம் செய்தார். அப்போது பிரதமர் நரேந்திர மோடி, மாநிலத் தலைவர் அண்ணாமலை பெயரில் அர்ச்சனை செய்து வழிபாடு நடத்தியவர், பாஜக ஒரு பெரிய குடும்பம் என்று கூறி தன்னுடன் வந்திருந்த பாஜக நிர்வாகிகள் அனைவருக்கும் பெயர், நட்சத்திரம் கூறி அர்ச்சனை செய்ய வலியுறுத்தினார். 

திருச்சியில் ரௌடி ஜெகனை என்கவுண்டர் செய்யவில்லை; தற்காப்புக்காகவே சுட்டனர் - போலீஸ் விளக்கம்

தொடர்ந்து ஸ்ரீ அபிராமி சன்னதியில் வழிபாடு மேற்கொண்டு வானதி சீனிவாசன்  தம்பதிகள் இருவரும் மாலை மாற்றிக்கொண்டு இனிப்புகள் ஊட்டி 60 வயது பூர்த்தி விழாவை  கொண்டாடினர். பின்னர் பாஜக நிர்வாகிகள் தம்பதிகளிடம் ஆசி பெற்றனர்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

 இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன் கூறுகையில், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்கு பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். ஆனாலும் காவிரி நீர் கிடைக்காமலும், பருவமழை பொய்த்து போவதாலும் விவசாயிகள் கடுமையான துயரத்திற்கு உள்ளாகியுள்ளனர். இவர்களுடைய நலனை பாதுகாக்க வேண்டும் என்றால் டெல்டா காரன் என்று சொல்லும் தமிழக முதலமைச்சர் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை ஏற்படுத்தித் தர வேண்டும். அதை விடுத்து சட்டப்பேரவையில் ஒரு தீர்மானம், அறிக்கை விடுத்து மக்களை ஏமாற்றக்கூடாது. 

Heavy Rain: கோவையில் இரவில் கொட்டி தீர்த்த கனமழை

பயிர் காப்பீடு திட்டத்தில் பிரதமர் முன்னுரிமை கொடுத்தாலும் மாநில அரசு பயிர் காப்பீட்டில் தன் பங்கை கொடுக்காததால் விவசாயிகளுக்கு முழுமையான இழப்பீடு கிடைக்கவில்லை. மாநில அரசின் மெத்தனப் போக்கினால் மத்திய அரசின் திட்டங்களின் பலன் மக்களுக்கு முழுமையாக கிடைக்கவில்லை. அதை உயர்த்தி வழங்குவதற்கு மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  

அமைச்சர் உதயநிதி  புதிதாக கதை சொல்ல ஆரம்பித்துள்ளார். நிறைய கதைகள் சொல்லட்டும். சொல்ற கதைகளுக்கெல்லாம் நீதிமன்றத்தில் வேறு மாதிரி பதில் கூறியுள்ளார். தற்போது நான் கோயிலில் இருப்பதால் வேறு மாதிரி சொல்ல விரும்பவில்லை என்றார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

நாகையில் கொளுத்தும் வெயில்; திடீரென மயங்கி விழுந்த பெண் - தவெக கூட்டத்தில் பரபரப்பு
DSPக்கே பாதுகாப்பு இல்லையா? எனக்கு உயிர் முக்கியம்! DSP சுந்தரேசன் பகீர் குற்றச்சாட்டு