தொடர் கனமழை எதிரொலி; நாகையில் 25 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை

Published : Nov 15, 2023, 10:19 PM IST
தொடர் கனமழை எதிரொலி; நாகையில் 25 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை

சுருக்கம்

நாகையில் கொட்டி தீர்த்த கன மழையால் 25 ஆயிரம் ஏக்கர்  சம்பா இளம் பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதம்; சாகுபடி செய்த வயல்களில் மழை நீர் தேங்கி கடல் போல் காட்சியளிக்கிறது.

தமிழகத்தில்  வடக்கிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. நாகை மாவட்டத்தில் நேற்று முதல் விடாமல் தொடர் கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக நாகை, வேளாங்கண்ணி, கீழ்வேளூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் அதி தீவிர கன மழை பெய்தது. இதனால் நாகை மாவட்டத்தில் பயிரிடப்பட்ட சம்பா பயிர்கள் முழுவதும் மழை நீரில் மூழ்கி நாசமாகி உள்ளது. நாகை கடைமடை பகுதியில்  குறுவை சாகுபடி முழுவதுமாக பொய்த்து போன நிலையில் சம்பா சாகுபடியில் விவசாயிகள் ஈடுப்பட்டு வந்தனர். 

முதல்வர், ஆளுநர் பங்கேற்ற விழாவில் பழங்குடியின மக்கள் தரையில் அமர வைக்கப்பட்டதால் சர்ச்சை

குறிப்பாக கீழ்வேளூர், பட்டமங்கலம், தேவூர், திருக்கண்ணங்குடி, வடக்காலத்தூர், ராதாமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் நேரடி விதைப்பு மூலமாக தெளிக்கப்பட்ட சம்பா இளம் பயிர்கள் முழுவதுமாக மழை நீரில் மூழ்கி உள்ளது. அதே போல் நாகை ஒன்றியத்திற்கு உட்பட்ட பாலையூர்,  வடகுடி, தெத்தி, வைரவன்யிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் தாளடி, நடவு செய்த சம்பா பயிர்கள், நேரடி விதைப்பில் முளைத்த நெற் பயிர்கள் அனைத்தும் மூழ்கி உள்ளது. 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

தற்போது நாகை மாவட்டத்தில் கீழ்வேளூர், நாகை, திருமருகல், கீழையூர் ஒன்றியங்களில் சுமார் 25 ஆயிரம் சம்பா இளம் பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளது. பாலையூர் பகுதிகளில் வயல்களில் தேங்கியுள்ள மழை நீர் கடல் போல் காட்சியளிக்கிறது. வயல்களில் தேங்கியுள்ள தண்ணீர் வடிவதற்கு ஒரு வார காலம் ஆகும் என்பதால் மூழ்கி உள்ள பயிர்கள் அனைத்தும் அழுகி போகும் என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். உடனடியாக மாவட்ட நிர்வாகம் வயல்களில் தேங்கியுள்ள வடிய வைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்., வேளாண்மை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

நாகையில் கொளுத்தும் வெயில்; திடீரென மயங்கி விழுந்த பெண் - தவெக கூட்டத்தில் பரபரப்பு
DSPக்கே பாதுகாப்பு இல்லையா? எனக்கு உயிர் முக்கியம்! DSP சுந்தரேசன் பகீர் குற்றச்சாட்டு