நாகையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் அதிமுக பெண் ஊராட்சி மன்ற தலைவி நிகழ்ச்சி முடிவடையும் வரை ஓரமாக நிற்க வைக்கப்பட்ட சம்பவம் பேசுபொருளாகி உள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஊராட்சிகளில் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர், தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கட்டப்பட்ட புதுச்சேரி ஊராட்சியில் நியாய விலைக் கடை, வடுகச்சேரி ஊராட்சியில் அங்கன் வாடி மையம், பயணிகள் நிழற்குடை, செம்பியன்மகாதேவி ஊராட்சியில் அங்கன்வாடி மையம், மகாதானம் ஊராட்சியில் நியாய விலை கட்டிடம் திறப்பு விழா இன்று நடைப்பெற்றது.
சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்துக் கொண்டு கட்டிடங்களை திறந்து வைத்தார். வடுகச்சேரி ஊராட்சியில் அங்கன்வாடி மையம் கட்டிடத்தை திறந்து வைத்து அரசின் நலத்திட்டம் குறித்து பேசினார். இதில் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி, மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத் தலைவர் கௌதமன், தாட்கோ தலைவர் மதிவாணன் கலந்துக் கொண்டனர்.
வடுகச்சேரி பெண் ஊராட்சி மன்றத் தலைவர் அதிமுகவை சேர்ந்தவர் என்பதால் அவருக்கு அமர இருக்கை வழங்காமல் உள்ளூர் திமுகவினர் பார்த்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. நிகழ்ச்சி முடியும் வரை அவர் நின்றுக் கொண்டிருந்தார். அதே மற்ற இருக்கைகளில் திமுகவைச் சேர்ந்த மாவட்ட ஊராட்சித் தலைவர் உமா மகேஸ்வரி, ஒன்றியக் குழுத் தலைவர் அனுசியா, திமுக ஒன்றிய செயலாளர்களுக்கு இருக்கை ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
மேலும் நிகழ்ச்சியில் தமிழ்தாய் வாழ்த்து பாடல் ஒலிக்கும் போதே அதை பொருட்படுத்தாமல் திமுக ஒன்றிய செயலாளர் வடவூர் ராஜேந்திரன், அமைச்சர் ரகுபதிக்கு வேஸ்டி அணிவிப்பதிலே மும்முரமாக இருந்தார். மேலும் திமுக உட்கட்சி சண்டை துண்டு போர்த்துவதில் அரங்கேறியது. தாட்கோ தலைவர் மதிவாணனுக்கு கடைசியில் துண்டு போத்தியதால் ஆவேமடைந்த அவர் போட வந்த துண்டை வாங்காமல் தள்ளி விட்டாதல் பரப்பரப்பு ஏற்பட்டது.
அமைச்சர் கே என் நேருவின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்; திமுக பிரமுகரால் பரபரப்பு
அமைச்சர் ரகுபதி தீவிரமாக பேசிக் கொண்டிருக்கும் போதே தாட்கோ தலைவர் மதிவாணனுக்கும், ஒன்றிய செயலாளர் வடவூர் ராஜேந்திரனுக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஹைலைட்டே பெண் ஊராட்சி மன்றத் தலைவரை நிகழ்ச்சி முடியும் வரை அமர வைக்காமல் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ரகுபதி பெண்கள் தலைநிமிர்ந்தால்தான் நாடு தலை நிமிரும், பெண்களுக்கு சமுதாயத்தில் தனியான இடத்தை, சமத்துவமான இடத்தை தரவேண்டும் என்று பேசியது நகைச்சுவையை ஏற்படுத்தியது.