மயிலாடுதுறை மாவட்டத்தில் பிரபல தனியார் பேக்கரியில் குழந்தையின் பிறந்தநாளுக்காக வாங்கப்பட்ட கேக்கில் புழுக்கள் நெழிந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே நாகூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பாலமுருகன் மற்றும் ஷோபனா தம்பதியர். இவர்களது மகன் பூபதியின் 8வது பிறந்த நாளினை முன்னிட்டு கடந்த 23ம் தேதி மயிலாடுதுறை பட்டமங்கலம் தெருவில் உள்ள பிரபல பேக்கரியில் (ஐயங்கார்) ரெட் மில்ஸ் பிரஷ் கேக்கை வாங்கிச் சென்றுள்ளனர். மாலை ஆறு மணி அளவில் கேக்கை வாங்கிவிட்டு 7.30 மணி அளவில் வீட்டிற்கு சென்று பிறந்தநாள் கொண்டாடியுள்ளனர்.
அப்போது குழந்தைகளுக்கு கேக்கை வெட்டி கொடுத்த போது அதில் புழுக்கள் நெழிந்து கொண்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக கேக்கை வெட்டிய போது அதில் நூல் போல் பிரிந்துள்ளது. உடனடியாக தொலைபேசியில் பேக்கரியில் புகார் தெரிவித்த போது நாளை கடைக்கு நேரில் வருமாறு தெரிவித்துள்ளனர். பின்னர் தம்பதியினர் மறுநாள் கடைக்கு சென்று இது குறித்து முறையிட்டுள்ளனர்.
உங்களுக்கு மட்டும் தான் கருமாதி நடத்த தெரியுமா? கன்னடர்களுக்கு போட்டியாக களத்தில் இறங்கிய தமிழர்கள்
அப்போது கேக்கிற்கான தொகையை திருப்பி அளிப்பதாக கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்திற்கு எந்த ஒரு விளக்கமும் பேக்கரியின் தரப்பில் அளிக்காமல் தகாத வார்த்தைகளால் பேசியதாகவும் கூறப்படுகிறது. இதனை அடுத்து இன்று திருவிளையாட்டம் பகுதியில் அரசு நிகழ்ச்சிக்காக வருகை தந்திருந்த மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை இடம் இச்சம்பவம் குறித்து புகார் மனு அளித்தனர்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
மேலும் தகுந்த ஆய்வு மேற்கொண்டு தகாத வார்த்தைகளால் பேசிய ஊழியர்கள் மீதும், கெட்டுப்போன கேக்கை விற்பனை செய்த கடை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். மனு மற்றும் வீடியோ ஆதாரத்தை பெற்றுக் கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் உரிய நடவடிக்கை எடுப்பதாக அப்போது உறுதி அளித்தார். இச்சம்பவம் குறித்த வீடியோ இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு மயிலாடுதுறை பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.