மனைவிக்கு பணம் கொடுக்காத மணமகன் குடும்பத்தை ஊரைவிட்டே ஒதுக்கி வைத்த கிராமம்; சீர்காழியில் பரபரப்பு

By Velmurugan s  |  First Published Aug 15, 2023, 9:59 AM IST

சீர்காழி அருகே ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்காத காரணத்தினால் எனது குடும்பத்தை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளதாக மீனவர் ஒருவர் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா கீழமூவர்க்கரை மெயின்ரோட்டை சேர்ந்தவர் மூர்த்தி(வயது 58). மீனவர். இவர் தன்னையும், தனது குடும்பத்தினரையும் கீழமூவர்க்கரை மீனவ பஞ்சாயத்தார்கள் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளதாக குற்றம்சாட்டி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் ஆட்சியர் மகாபாரதியிடம் புகார் மனு அளித்துள்ளார்.

அந்த மனுவில் கீழமூவர்க்கரை கிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வருவதாகவும், தனது மூத்தமகன் அன்பரசனுக்கும் வாணகிரி கிராமத்தைச் சேர்ந்த பிரசாந்தி என்பவருக்கும் கடந்த 2013ம் ஆண்டு திருமணம் செய்துவைத்தோம். அதன்பிறகு தனது மகன் மடவாமேடு கிராமத்தில் தங்கி மீன்பிடிதொழில் செய்து வந்தார். அதன்பிறகு வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றபோது சம்பாதித்த பணத்தை மருமகளுக்கு கொடுத்தார். 

Latest Videos

undefined

திருப்பூரில் வீட்டு வேலைக்கு வந்த சிறுமிய பல ஆண்டுகளாக மிரட்டி வன்கொடுமை செய்த இருவர் கைது

தற்போது கணவன், மனைவிக்கிடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்துள்ளனர். தனது மகன் விவாகரத்து கேட்டு சீர்காழி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு எக்ஸ்பார்டி தீர்ப்பாகியுள்ளது. இந்நிலையில் எனது மருமகளுக்கு 30 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டுமென்று ஊர் பஞ்சாயத்தார்கள் கூறினர். அதற்கான வசதி இல்லை என்று கூறியதால் பஞ்சாயத்தார்கள் எனது குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர். 

வீட்டிலேயே பாலியல் தொழில் நடத்தி கல்லா கட்டிய கணவன், மனைவி; காவல்துறை அதிரடி

இதனால் கடந்த 4 மாதங்களாக மீன்பிடி தொழிலுக்கு செல்ல முடியாததால் எனது குடும்பத்தினர் சாப்பாட்டிற்கே வழியின்றி தவித்து வருகிறோம். ஊரைவிட்டு விலக்கி வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று காவல்நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. நீங்களும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை என்றும் நடவடிக்கை  எடுக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

click me!