
நாகை மாவட்டம் வெண்மணச்சேரி வடபாதி பகுதியைச் சேர்ந்தவர் பக்கிரிசாமியின் மகன் பரமானந்தம்(வயது 28). இவர் தனது (பேஸ்புக்) முகநூல் பக்கத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி, தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் குறித்து அருவருக்கத்தக்க கருத்துகளை பதிவிட்டதாகக் கூறப்படுகிறது.
மேலும் திமுக குறித்தும் ஆபாச வார்த்தைகளை பயன்படுத்தி அவதூறு பரப்பியதாகக் கூறப்படுகிறது. மேலும் அதனை மற்றவர்களுக்கு பகிர்ந்தும், பரப்பியும் உள்ளார். இது குறித்து தென்பாதியைச் சேர்ந்த தி.மு.க.வின் மாவட்ட ஆதி திராவிட நலக்குழு துணை அமைப்பாளர் ஜோதிபாசு என்பவர் கீழையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த கீழையூர் காவல் துறையினர் பரமானந்தத்தை கைது செய்து நாகை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு சிறையில் அடைத்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடக்கப்பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டல்; அரசுப்பள்ளி ஆசிரியர் அதிரடி கைது