நடுக்கடலில் மிதந்து வந்த பொட்டலங்கள்; ஆர்வத்துடன் எடுத்துப் பார்த்த மீனவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

By Velmurugan s  |  First Published Aug 12, 2023, 5:18 PM IST

நடுக்கடலில் மிதந்து கொண்டிருந்த கஞ்சா பொட்டலங்களை மீட்ட காரைக்கால் மீனவர்கள் அதனை கடற்படை காவலர்களிடம் ஒப்படைத்த நிலையில், காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


காரைக்கால் மாவட்டம், திருப்பட்டினம் அடுத்த பட்டினச்சேரி, சுனாமி நகரைச் சேர்ந்தவர்  விஸ்வநாதன்(வயது 49). மீனவரான விஸ்வநாதன் இன்று காலை அதே பகுதியைச் மீனவர்களுடன் பைபர் படகில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளார்.

நாகை மாவட்டம் பனங்குடி சிபிசிஎல் கிழக்கே வங்க கடலில் ஆறு நாட்டிகள் மைலில் மீன்பிடித்து கொண்டிருந்த போது நடுகடலில் பொட்டலம் ஒன்று மிதந்து கொண்டு இருந்ததை மீனவர் விஸ்வநாதன் கண்டறிந்துள்ளார். பின்னர் அதனை எடுத்து பார்த்தபோது சுமார் ஒரு கிலோ எடையுள்ள கஞ்சா பொட்டலம் இருந்தது தெரியவந்தது.

Tap to resize

Latest Videos

விசாரணைக்கு அழைத்த போலீசார்; அவமானத்தில் தற்கொலை செய்துகொண்ட விவசாயி - காவல்நிலையம் முற்றுகை

பின்னர் மிதந்தது வந்த கஞ்சா பொட்டலத்தை மீட்டு, மீனவர் விஸ்வநாதன் காரைக்கால் திருப்பட்டினம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். ஒரு கிலோ கஞ்சா பொட்டலத்தை காவல் துறையினர் கைப்பற்றி இலங்கைக்கு கடத்தப்பட்டதா என்று தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். நாகை கடற்பரப்பில் கஞ்சா பொட்டலம் கடலில் மிதந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெண்களின் புகைப்படங்களை மார்பிங் செய்து மிரட்டல்; மனைவி பிரசவத்திற்கு சென்ற நிலையில் இளைஞர் காம லீலை

click me!