கண்ணின் இமை போல டெல்டா மாவட்டங்களை முதல்வர் பாதுகாத்து வருகிறார் - அமைச்சர் மெய்யநாதன்

By Velmurugan s  |  First Published May 10, 2023, 8:51 AM IST

கண்களை இமைகள் பாதுகாப்பது போல் டெல்டா மாவட்டங்களில் எந்த ஒரு அபாயகரமான திட்டத்தையும் அனுமதிக்காமல் முதலமைச்சர் பாதுகாத்து வருவதாக திமுக அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.


மயிலாடுதுறையில் திமுக அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டமானது நடைபெற்றது. மயிலாடுதுறை நகர செயலாளர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் ஏராளமான திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர். தொடர்ந்து சிறப்பு அழைப்பாளராக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்ய நாதன் கலந்து கொண்டு அரசின் சாதனை திட்டங்களை பொதுமக்களிடம் எடுத்துரைத்து சிறப்புரை ஆற்றினார். 

தங்கும் விடுதியில் பெண் சுற்றுலா பயணிக்கு பாலியல் தொல்லை - காங்கிரஸ் மாவட்ட தலைவர் கைது

Tap to resize

Latest Videos

undefined

அப்போது அவர் பேசுகையில், டெல்டா மாவட்டங்களை கண்களை இமைகள் பாதுகாப்பது போல் முதலமைச்சர் ஸ்டாலின் பாதுகாத்து வருகிறார். மத்திய அரசு 3 நிலக்கரி சுரங்கங்களுக்கு ஏலமிட அறிவிப்பை வெளியிட்டவுடன் உடனடியாக சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து கண்டிப்பாக இந்த திட்டத்தை டெல்டா மாவட்டத்தில் செயல்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று சொன்னவர் முதலமைச்சர் ஸ்டாலின்.

குடும்ப வறுமையால் வேலைக்கு சென்ற மாணவன்; சாலையின் குறுக்கே வந்த மாடால் நேர்ந்த சோகம்

அதிமுக ஆட்சியில் என்னுடைய தொகுதியான புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அறிவித்தபோது அதிமுகவினர் வாய் திறக்கவில்லை. 176 நாட்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த திமுக தலைவர் ஸ்டாலின் போராட்ட களத்திற்கு வந்து எந்த காரணத்தைக் கொண்டும் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் அபாயகரமான திட்டத்தை அனுமதிக்க மாட்டேன் என்று விவசாயிகளிடம் சொல்லிவிட்டு வந்தார். தற்போது ஆட்சிக்கு வந்த பின்னர் அந்தத் திட்டம் வராமல் தடுத்துள்ளார் என்று தெரிவித்தார்.

click me!