நாகையில் அரசுப் பேருந்தில் இருந்து மீனவப் பெண்கள் இறக்கிவிடப்பட்டதால் பரபரப்பு

By Velmurugan sFirst Published May 1, 2023, 11:13 PM IST
Highlights

நாகப்பட்டினம் மாவட்டத்தில் பேருந்தில் அமர்ந்திருந்த மீனவப் பெண்கள் ஓட்டுநர், நடத்துநரால் வழுக்கட்டாயமாக இறக்கி விடப்பட்ட போது ஏற்பட்ட வாக்குவாதத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து திருச்சி நோக்கி சென்ற அரசுப் பேருந்தில் திருவாரூர் செல்வதற்காக தங்களது மீன் கூடைகளுடன் 6 மீனவப் பெண்கள் ஏறி பேருந்து பின் இருக்கையில் அமர்ந்துள்ளனர். அப்போது நடத்துனர் திருச்சி பயணிகளை ஏற்றிய பிறகு கடைசியில் நீங்கள் ஏறிக் கொள்ளலாம் என அவர்களை இறங்க சொல்லி உள்ளார். 

இதனால் ஆத்திரம் அடைந்த மீனவப் பெண்கள் ஏன் நாங்கள் காசுக் கொடுத்து வரவில்லையா என்று கூறி இறங்க மறுத்து நடத்துனரோடு வாக்கு வாதத்தில் ஈடுப்பட்டனர். தொடர்ந்து பேருந்தின் ஓட்டுனர் அவர்களிடம் திருச்சி பயணிகளை முழுமையாக ஏற்றிய பிறகுதான் இடையில் உள்ள ஊர்களுக்கு செல்பவர்களை ஏற்ற முடியும் கூறி அவர்களை இறங்க சொல்லியுள்ளார்.

நாகையில் மதுபோதையில் தறிகெட்டு ஓடிய விவசாய சங்க தலைவரின் கார் மோதி ஒருவர் பலி

மீனவப் பெண்கள் நாங்கள் பின் இருக்கையில் தானே அமர்ந்துள்ளோம் என்று பலமுறை கூறியும் அவர்களை வலுக்கட்டாயமாக பேருந்தில் இருந்து இறக்கி விட்டுள்ளார்.  தொடர்ந்து அந்த பேருந்தில் திருச்சி, தஞ்சாவூர் பயணிகள் ஏறியதால் இருக்கை இல்லாத்தால் வேறு வழியின்றி அந்த மீனவப் பெண்கள் வேறு பேருந்தில் ஏறி சென்றனர். நாகை பேருந்து நிலையத்தில் பேருந்தில் அமர்ந்திருந்த மீனவப் பெண்களை இறக்கிவிட்ட நடத்துனர், ஓட்டுனரிடம் அப்பெண்கள் வாக்குவாத்தில் ஈடுப்பட்ட சம்பவம் சிறிது நேரம் பரப்பரப்பை ஏற்படுத்தியது.

click me!