
நாகப்பட்டினம் மாவட்டம் துறைமுகத்தின் உள்ளே இந்திய கடற்படை அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த காவலர் ராஜேஷ் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நேவல் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த ராஜேஷ் இன்று அதிகாலை 4 மணிக்கு துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.
முகாம் அலுவலகத்தில் இருந்து துப்பாக்கி வெடித்த சத்தம் கேட்ட சக காவலர்கள் மற்றும் ஊழியர்கள் உள்ளே சென்று பார்த்தபோது ராஜேஷ் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டபடி தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்து கிடந்துள்ளார். பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நாகை நகர காவல்நிலைய காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலத்தில் வி.ஏ.ஓ. வெட்டி கொல்ல முயற்சி காவல் துறையினர் விசாரணை
உயிரிழந்த ராஜேஷ் சடலம் பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட உள்ளது. மேலும் பணிச்சுமையின் காரணமாக உயிரிழந்தாரா அல்லது குடும்ப பிரச்சினை காரணமாக உயிரிழந்தாரா என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளதால் முதலீடுகள் அதிகம் வருகின்றன - அமைச்சர் பெருமிதம்
நாகையில் இந்திய கடற்படை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த கடற்படை காவலர் 30 குண்டுகள் கொள்ளளவு கொண்ட இன்சாஸ் துப்பாக்கியால் தனது கழுத்துப் பகுதியில் சுட்டுக் கொண்டதில் ஒரு குண்டு தொலைத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.