நாகையில் மதுபோதையில் தறிகெட்டு ஓடிய விவசாய சங்க தலைவரின் கார் மோதி ஒருவர் பலி

By Velmurugan s  |  First Published May 1, 2023, 10:57 PM IST

நாகை அருகே மதுபோதையில் தறிகெட்டு ஓடிய விவசாய சங்கத் தலைவரின் கார் அடுத்தடுத்த வாகனங்களில் மோதி விபத்து ஏற்படுத்தியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.


நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த எரவாஞ்சேரி ஊராட்சி மேல ஒதியத்தூரைச் சேர்ந்தவர் காவிரி தனபாலன். இவர் தமிழ்நாடு காவிரி விவசாசயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவராக உள்ளார். இவரது மகன் மற்றும் அவரது நண்பன் இருவரும் குடிபோதையில் காரை எடுத்துக் கொண்டு கீழ்வேளூரில் இருந்து  நாகை நோக்கி சென்றுள்ளனர். 

மதுபோதையில் இயக்கப்பட்ட பொலிரோ கார் தறிக்கெட்டு ஓடி நாகையில் இருந்து மிதிவண்டியில் வந்துக் கொண்டிருந்த மஞ்சக்கொல்லையைச் சேர்ந்த 34 வயதான வெங்கடேஷ் என்பவர் மீது மோதியது. இந்த விபத்தில் அவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். அடுத்ததாக இருசக்கர வாகனத்தில் வந்த மஞ்சக்கொல்லையச் சேர்ந கண்ணன் என்பவர்  மீது மோதியதில் அவர் படுகாயமடைந்தார். 

Tap to resize

Latest Videos

undefined

உயிருக்கு ஆபத்தான நிலையில்  சாலையில் துடித்துக் கொண்டிருந்தவரை மீட்ட பொது மக்கள் நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு 108 வாகனத்தில் அனுப்பி வைத்தனர். தொடர் விபத்துகளை செய்துவிட்டு காரை நிறுத்தாமல் சென்ற காரை  2 கிலோ மீட்டர் வரை அப்பகுதி பொதுமக்கள் விரட்டிச் சென்று பிடித்துள்ளனர். அப்போது காரை ஓட்டிவந்த காவிரி தனபாலன் மகன் மற்றும் அவரது நண்பனும் காரை நிறுத்திவிட்டு இறங்கி தப்பி ஓடியுள்ளனர். 

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளதால் முதலீடுகள் அதிகம் வருகின்றன - அமைச்சர் பெருமிதம்

தகவல் அறிந்து வந்த கீழ்வேளூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் தியாகராஜன் தலைமையிலான காவல் துறையினர் உயிரிழந்த வெங்கடேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு தலைமை  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த வெங்கடேஷின் மனைவி சடலத்தை பார்த்து கதறி அழுது மயங்கி விழுந்தது காண்போரை கண்கலங்க வைத்தது. 

ஆன்லைன் ரம்மி விவகாரம்; தமிழகத்தை தொடர்ந்து வரிசையாக மல்லுக்கட்டும் மாநிலங்கள்

குடி போதையில் காரை ஓட்டி  விபத்து ஏற்படுத்திவிட்டு நிறுத்தாமல் சென்றதால் அப்பகுதி மக்கள் ஆத்திரமடைந்து சாலையில் திரண்டு விபத்து ஏற்படுத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வாக்கு வாதத்தில் ஈடுப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. நாகை அருகே குடிபோதையில் காரை ஓட்டி விபத்துக்குள்ளாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில்  அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

click me!