நாகையில் அரசு மருத்துவர்களின் அலட்சியத்தால் பச்சிளம் குழந்தை உயிரிழப்பு? உறவினர்கள் வாக்குவாதம்

By Velmurugan s  |  First Published Mar 10, 2023, 12:16 PM IST

நாகையில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சளி தொந்தரவால் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட 3 மாத குழந்தை பரிதாபமாக உயிரிழந்த நிலையில் மருத்துவர்களின் அலட்சியம் தான் குழந்தை இறப்புக்கு காரணமென உறவினர்கள் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


நாகை அடுத்த வடக்குப்பால் பண்ணைச்சேரி பகுதியைச் சேர்ந்த தினேஷ் என்பவரின் 3 மாத குழந்தை ப்ரஷ்ணவி. மூன்று மாத குழந்தையை சளி தொந்தரவு காரணமாக நேற்று இரவு 9 மணி அளவில் அவரது பெற்றோர் நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். 

குழந்தை சளி தொந்தரவு மற்றும் அதனால் ஏற்பட்ட மூச்சு திணறல் காரணமாக உயிரிழந்துவிட்டதாக இரவு 11 மணிக்கு மருத்துவர்கள் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவர்கள் மற்றும் நிர்வாகத்திடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகம் சார்பில் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

Tap to resize

Latest Videos

undefined

நாகையில் காப்பகத்தில் தங்கியிருந்த அனைத்து குழந்தைகளுக்கும் மருத்துவ பரிசோதனை தேவை - பாஜகவினர் பரபரப்பு புகார்

இதனைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு வந்த காவல்துறையினரிடம் குழந்தையின் பெற்றோரும், உறவினர்களும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். மேலும் கடந்த 6 மாத காலத்தில் தற்போது வரை 8 குழந்தைகள் உயிரிழந்து இருப்பதாகவும், மருத்துவர்களின் அலட்சியமே குழந்தை உயிரிழக்க காரணமென உறவினர்கள் மற்றும் அங்கிருந்த பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். 

சாலையில் நடந்து சென்ற முதியவர் கிரேன் மோதி சம்பவ இடத்திலேயே பலி; சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு

இதுகுறித்து மருத்துவக்கல்லூரி முதல்வர் விஸ்வநாதனை தொடர்புகொண்டு கேட்டபோது, குழந்தைகள் பிறக்கும்போதே ஏற்படும் குறைபாடு காரணமாகவே உயிரிழக்கின்றனர். நாகையில் தரமான சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் இரவு, பகலாக பணியாற்றுகிறார்கள். முடிந்தவரை குழந்தை உயிரிழப்பை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தெரிவித்தார். நாகையில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சளி தொந்தரவால் சேர்க்கப்பட்ட 3 மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

click me!